Wednesday, September 14, 2011

தி.மு.க.,வுடன் கூட்டணியா? : முடிவை சோனியா அறிவிப்பார்: தங்கபாலு

சென்னை: ""உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவிப்பார்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சியுடன் சில நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் எல்லை வரையறை மற்றும் இட ஒதுக்கீடு பற்றிய முழு விவரங்கள் வெளியாகவில்லை. மாநில தேர்தல் கமிஷன் இறுதி செய்து அறிவித்த பின், காங்கிரசில் போட்டியிட மனுக்கள் பெற்றுக் கொள்ள முடியும். திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது. கூட்டணி கட்சியான தி.மு.க., போட்டியிடும். கருணாநிதியுடன், கூட்டணி நிலை குறித்து பல்வேறு விஷயங்களை விவாதித்தேன். பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த துயர சம்பவம் நடத்திருக்காது. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து, கருத்து தெரிவிக்கும் அதிகாரம் தமிழக தலைவர்களுக்கு இல்லை. மாநில தலைவர் என்ற முறையில், அனைவரிடமும் கருத்து கேட்டு, கட்சித் தலைமைக்கு தெரிவிப்பேன். கூட்டணி குறித்த இறுதி முடிவை சோனியா எடுப்பார். இவ்வாறு தங்கபாலு கூறினார். 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More