skip to main |
skip to sidebar
10:44 AM
Unknown
சென்னை: "தே.மு.தி.க.,வின் முறையான வளர்ச்சிக்கு, லட்சக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும், தாய்மார்களும் செய்த தியாகமும், உழைப்புமே காரணம்' என்று, விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து, விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கென்றே, தே.மு.தி.க., துவங்கப்பட்டு, 6 ஆண்டுகள் முடிந்து 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சியைத் துவங்கிய போது, தமிழக அரசியலில் உள்ள எத்தனையோ கட்சிகளில் இதுவும் ஒன்று என பேசப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில், கட்சி மகத்தான வளர்ச்சியடைந்துள்ளது. முறையான வளர்ச்சிக்கு, லட்சக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும், தாய்மார்களும் செய்த தியாகமும், உழைப்புமே காரணம். சட்டசபைத் தேர்தலில் வெற்றியை, கூட்டணி சேர்ந்து நிலை நாட்டியதில், தே.மு.தி.க.,வின் பங்கும் முக்கியமானது. வரும் உள்ளாட்சித் தேர்தலில், நம்முடைய சக்திக்கு மீறி பணியாற்றி, நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும். தே.மு.தி.க.,வின் 7ம் ஆண்டு விழா, வரும் 25ம் தேதி கோவை பீளமேடு விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அன்னை சத்யா பூங்காவில் நடைபெற உள்ளது. நானும், அவைத் தலைவரும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் சிறப்புரையாற்ற உள்ளோம். இவ்வாறு, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment