Monday, September 12, 2011

முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை

கும்பகோணம்: முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இடஒதுக்கீடை உயர்த்தி வழங்குமாறு, தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் திருமங்கலக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார். தேசிய செயலாளளர் குரம் அனிஸ்உமர் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களாவது, கட்சியின் மாநில தலைவராக பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், பொதுச் செயலாளராக முகமதுஅபுபக்கர், பொருளாளராக ராமநாதபுரம் ஷாஜகான் மற்றும் செயலர்கள், துணை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 10 சதவீத இடங்களை கேட்டுப் பெறுவது, தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கபட்டது. கூட்டணியில் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசியல் ஆலோசனை குழுவிற்கு முழு அதிகாரம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More