Thursday, September 8, 2011

டெல்லி குண்டுவெடிப்பு- மேலும் ஒருவர் மரணம்- பலி எண்ணிக்கை 12 ஆனது

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த பிரமோத் என்பவர் இன்று பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நேற்று 11 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கலில் பிரமோத் என்பவர் இன்று ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 40. காஜியாபாத்தைச் சேர்ந்தவர் பிரமோத்.

இவரது மரணத்தைத் தொடர்ந்து பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதே மருத்துவமனையில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ல மேலும் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More