Wednesday, August 17, 2011

சூரத்துல் அன்னிஸா (பெண்கள்)


05 . (அநாதைகளின் பொருள்களுக்குக் காரியஸ்தராக ஏற்பட்ட நீங்கள், அவர்களின்) வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமிருக்கும் (அவர்களுடைய) பொருட்களை, புத்திக் குறைவானவர்களாக அவர்கள் இருந்தால் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டாம், இன்னும் அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடைகளையும் அணிவியுங்கள், அவர்களுக்கு நல்ல வார்த்தைகளையே கூறுங்கள்.

06 . இன்னும் அநாதைச் சிறுவர்கள் அவர்கள் திருமண வயதடையும் வரை (தொழில் முதலியவற்றில் ஈடுபடுத்தி, பழக்கி, கல்வியும் கற்பித்து) சோதித்து வாருங்கள். (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்கலாலித் தங்கள் பொருட்களைப் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்று (எண்ணி) அவர்களுடைய பொருட்களை அவசர அவசரமாவும், அளவு கடந்தும் நீங்கள் தின்றுவிடாதீர்கள் இன்னும் (அநாதையின்) பொருட்களையுடைய காரியஸ்தனாகிய) அவர் செல்வந்தனாக இருந்தால் (அதை நிர்வகிப்பதற்காக எதையும் தனக்காக் எடுத்துக் கொள்ளாது) தவிர்த்துக் கொள்ளவும், அவர் ஏழையாக இருந்தாலோ நியாமான அளவு (அதிலிருந்து) அவரும் புசிக்கவும், மேலும் அவர்களுடைய பொருட்களை, நீங்கள் அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களுக்குகாக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன். (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்).

10. நிச்சயமாக, அநாதைகளின் பொருட்களை அநியாமாக தின்கின்றார்களே அத்தகையோர் அவர்கள் தங்கள் வயிறுகளில் (நிரப்பித்) தின்னுவதெல்லாம் நெருப்பைதான். இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பினுள் நுழைவார்கள்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More