Wednesday, August 17, 2011

பலூன் சிற்பங்கள்! (வீடியோ இணைப்பு)



பலூன் பைத்தியமான இவர் 40 அடி உயரத்திற்கு பலூன் சிற்பங்களைப் படைத்து அசத்துகிறார். இவருடைய கைவண்ணத்தில் உருவாகும் வேற்று கிரக தோற்றமுடைய, பிரமாண்டமான பலூன்களை இரவு நேர விருந்துகளில் வைத்து வேடிக்கைப் பார்க்க முடியாது.

குழந்தைகளுக்காகத்தான் இவற்றை செய்கிறார். ஆனால் செய்து முடித்ததும் குழந்தைகள் விளையாட முடியாத அளவுக்கு அவை பிரமாண்டமாக பயமுறுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.



இந்த பிரமாண்டமான பலூன் சிற்பங்களை வடிவமைக்க பல மணிநேரங்களை செலவழிக்கும் ஹேக்கன் அதற்காக மொத்தமாக 5 ஆயிரம் பலூன்களைக் கூட ஒரே சமயத்தில் வாங்கி பயன்படுத்துகிறார்.

கடல் சார்ந்த அல்லது வேற்று கிரக ஜீவன்களைப் போன்று உருவம் வடிவமைக்க பல நுணுக்கமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லும் ஹேக்கன் தான் செய்யும் பலூன் சிற்பங்களை கடற்கரைப் பகுதி அல்லது வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று புகைப்படம் எடுத்து திரும்புகிறார்.

அப்போது அவற்றுக்கு உயிர் வந்ததுபோல் தோற்றம் கிடைக்கிறது என்பதை அவர் உணர்கிறார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More