Tuesday, August 16, 2011

இரு கருப்பைகள் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்தியப் பெண்! (படங்கள் இணைப்பு)

 வட இந்தியாவின் பட்னா நகரத்தில் 28 வயதான றிங்குதேவி என்பவரிற்கு இரு கருப்பைகள் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

இக்குழந்தைகள் 41 இறாத்தல் 40 அவுண்ஸ் மற்றும் 31 இறாத்தல் 30 அவுண்ஸ் நிறைகொண்டவையாக காணப்பட்டன.

அதிசயமாக 50 மில்லியனில் ஒருவருக்குத் தான் அதுவும் அரிதாகவே இரண்டு கருப்பைகள் காணப்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போகின்ற தென்றே இவர் நினைத்திருந்தார்.

இப்பிள்ளைகள் ஒவ்வொரு மாத இடைவெளியில் இருந்ததை வைத்தியர்கள் கண்டுபிடித்தனர்.

மாதவிடாய்ச் சுற்றுவட்டம் இரு கருப்பைகளிலிருந்தும் வழமையாக ஏற்படுவதால் முதற்குழந்தை ஒரு கருப்பையில் உருவாக, அடுத்த மாதத்தில் அடுத்த கருப்பையில் இக்குழந்தை உருவாகியுள்ளது என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

‘எனக்கு வலி ஏற்பட்டபோதே இரு கருப்பைகள் இருப்பது பற்றிக் கூறப்பட்டது. இதையிட்டு நான் உண்மையில் பயந்தேன். இதனால் என்ன விளைவுகள் ஏற்படுமோ என்றும் நினைத்துப்பார்க்க முடியாமலிருந்தேன். ஆனால் எல்லாமே நன்றாக நடந்து இதற்குள்ளிருந்து மீண்டுவிட்டதில் எனக்குப் பெருமகிழ்ச்சியே. என்னையும் எனது குழந்தைகளையும் காப்பாற்றியதற்காகக் கடவுளுக்கு நான் நன்றி கூறுகின்றேன்,’ என றிங்குதேவி கூறியுள்ளார்.



இரட்டைக் கருப்பைகள் என்றால் அவற்றில் தனித்தனியான கழுத்துப்பகுதிகள் காணப்படும். சிலவேளைகளில் இவற்றில் தனித்தனிப் பெண்ணுறுப்புக்கூட காணப்படலாம்.
ஒவ்வொரு கருப்பையும் தனது கருவை எதிர்பார்த்து பலோப்பியன் குழாயுடன் தொடர்புபட்டிருக்கும். இவ்வாறான நிலையானது, மரபணுவியல் கலப்பினால் முல்லேரியன் குழாய்கள் உருவாகாமல் விடுவதாலேயே ஏற்படுகின்றது.
இவ்வாறு இருப்பவர்களுக்கு எப்போதும் சத்திரசிகிச்சைமூலமே குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். அத்துடன் இதனால் கரு உண்டாகாமை, தொடர்ச்சியான கருச்சிதைவு, பிள்ளைப்பேறின் பின்னான இரத்தப்போக்கு என்பன ஏற்படும்.
இத்தகைய சம்பவங்கள் அரிதெனக் கூறும் வைத்தியர் இதனைத் தான் இறுதிக்கணம் வரை உணரவில்லை என்றும் அதேபோல றிங்குதேவியும் 4 வருடங்களின் முன்னர் தனது முதலாவது குழந்தையைப் பெற்றபோதும் இதுபற்றி அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.
இவ்வாறான குழந்தைப்பேறுகள் வழமையாகத் தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தானவை. எனினும் தற்போது றிங்குதேவியும் குழந்தைகளும் நலமேயுள்ளனர்.


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More