Tuesday, August 16, 2011

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!



சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை விநோதமான முறையை கையாண்டு தெரிவித்துள்ளார்.  பாங் கன் என்ற மேற்படி நபர், வட கிழக்கு நகரான கிங்டாவோவிலுள்ள பொது சதுக்கத்தில் ‘கரட்’ போன்று வேடமணிந்திருந்த தனது நண்பர்கள் முன்னிலையில் தனது காதலியான ஸாங் ஸின்யுவிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.  சீனாவில் காதலர் தினமாக கருதப்படும் தினத்திலேயே அவர் இவ்வாறு தனது விரு ப்பத்தை தெரிவித்துள்ளார்.  பாங் கன் தனது விருப்பத்தை தெரிவிக் கும் முன் கரட் போன்று வேடமிட்டிருந்த நண்பர்கள் குழுவினருடன் ஆடிப்பாடியுள் ளார்.

இந்நிலையில் அவரின் அதிரடி நடவடிக் கையில் மனதைப் பறிகொடுத்த ஸாங் ஸின்யு, உடனடியாக தனது சம்மதத்தை மகி ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த விநோதமான நிகழ்வானது லியோ னிங் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட் டது. ஸாங் ஸின்யு முன்பாக வந்து தனது கரட் உருவத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அகற்றிய பாங் கன், “”6 மாதங்களுக்கு முன் உன்னை சந்தித்தேன். எமது முதலாவது சந்திப்பின் போது நீ நாணமடைந்தது எனது ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது. திரையரங்கு ஒன்றில் உனது கரத்தை முதன் முதலாக பற்றிய போது நான் அமைந்த பரவசத்தை என்னால் விபரிக்க முடியாதுள்ளது” என தெரிவித்தார்.

உடனே அங்கு கரட் உருவத்தில் கூடியி ருந்த நண்பர்கள், “”அவரை திருமணம் செய். அவரை திருமணம் செய்” என்று கோஷம் எழுப்பினர். திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை காதலியிடம் வெளியிடுவதற்கு பாங் கன்னுக்கு 100,000 யுவான் (15,600 அமெரிக்க டொலர்) பணம் செலவாகியுள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More