
அன்னையே என் ஒவ்வோர் அங்கத்தையும்
பரிசாய் தந்தவளே
உன் வியர்வை என் நெஞ்சில்
உதிரமாய் ஓடுதடி
அருளுக்கு அம்பிகையாம்
எனக்கு எல்லாவற்றிக்கும்
நீயே அருளாம்பிகையாம்
சோகம் கவலை என்னை துரத்த
பொதி சுமந்த தெய்வமாய்
சுமை தாங்கிய தெய்வம் நீயடி
கருவுற்ற நாளில் இருந்து
எமக்காய் வாழ்ந்து
பெண்ணியம் காத்தவள் நீ
என் ஒற்றை அன்பில் பற்றுண்டு
ஒத்தையாய் எங்கும் உன் அன்புக்கும்
என்றும் அடிமை நான்
உன்னை பெற்ற
உன் அன்னைக்கு நன்றி...
0 comments:
Post a Comment