Monday, August 15, 2011

இலவச தொழில் பயிற்சி மற்றும் கல்விச் செய்திகள்


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பொதுப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் கல்வியில் ஆர்வமுள்ள பட்டதாரிகள்இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளியின் பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.
 இந்தப் படிப்பில் 500 மாணவர்கள்நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படுவர். அக்டோபர் 9-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
 இதற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் கல்வி மையங்களில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

சென்னை பல்கலை.யில் மாலை நேர படிப்புகள்
சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாலை நேர படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. பகுதி நேர படிப்பாக ஊடகவியல் முதுநிலை பட்டப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புமாலை நேர படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால்அதன் பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில்பல்கலைக்கழகம் இப்போது மீண்டும் மாலை நேர படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது: வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுபல்கலைக்கழகத்தில் மீண்டும் மாலை நேரப் படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. மற்றும் எம்.எஸ்சி. ஜியோமெட்ரிக்ஸ் ஆகிய இரண்டு படிப்புகள் நடப்பு கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளன. செப்டம்பர் 15-ம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
பகுதி நேர படிப்பு: இதுபோல்பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணிபுரிவோர் பயன் பெறும் வகையில் ஊடகவியலில் முதுநிலை பட்டப் படிப்புபகுதி நேர படிப்பாக நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புக்குஆண்டுக்கு 30 நாள்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். 10 நாள்களுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டியது கட்டாயம்.
கல்வித் தகுதி: இந்த மாலை நேர மற்றும் பகுதி நேர முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்சி

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.பத்மினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை அவினாசி ரோடு கொடிசியா வளாகத்துக்கு எதிரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி  செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் கல்வியை தொடர முடியாத ஏழை, எளியோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போரின் மேம்பாட்டுக்காக இலவச தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பெண்களுக்கு 6 மாத கால தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சியும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 3 மாத கால கம்ப்ïட்டர் பயிற்சியும் வழங்கப்படும்.
இதே போல் ஆண் மற்றும் பெண்களுக்கு ஒரு மாத பயிற்சியாக உணவு பாதுகாத்தல் மற்றும் பதப்படுத்துதல், பேக்கரி பொருள் தயாரிப்பு, 2 வாரகால பயிற்சியாக காகிதப்பை தயாரித்தல் ஆகியவை வழங்கப்படும். அரசூர், இருகூர், காளப்பட்டி, ட்டணம், கலங்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் விரிவாக்க மையங்களில் பெண்களுக்கு 6 மாத பயிற்சியாக தையல், எம்ப்ராய்டரி பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது திட்ட அலுவலர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அவினாசி ரோடு, சிவில் விமானநிலைய அஞ்சல்,கோவை-14 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0422-2913220 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More