. காரைக்குடி: உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் கொள்ளையர்கள் தங்களை கைவரிசையை காட்டியுள்ளனர். சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் வீட்டில் நடந்துள்ள இந்த கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ளது. அந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். அந்த வீட்டில் உள்ள 6 அறைகளை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இதில் 3 அறைகள் ப. சிதம்பரத்திற்கு சொந்தமானவை ஆகும்.
உள்துறை அமைச்சரின் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ப. சிதம்பரம் குடும்பத்தின் பூர்வீக நகைகள் அந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
2. தமிழகத்தில், 85 லட்சம் பேர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக, ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது, வருத்தப்பட வேண்டிய விஷயம்.தமிழக மக்கள் தொகை, 7 கோடி என்றால்,தமிழகத்தில், 10 பேருக்கு ஒரு குடிகாரர் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஆயத்தீர்வு வசூல், 10ஆண்டுகளுக்கு முன், 3,000 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது, 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.தமிழக அரசின் மொத்த வரி வசூலில், மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், 50சதவீதத்தை விரைவில் தாண்டலாம்.
தமிழகம் குடிப்பழக்கத்தில் மூழ்குவது குறித்து யோசிக்க வேண்டும். மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை, மக்களின் சமூக வாழ்க்கை மேம்பட, இலவசங்கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறலாம். அதே சமயத்தில், தனிப்பட்ட குடும்பத்தின் சமூக நிலை, எப்படி தாழ்ந்து விட்டது என்பதையும்,அரசு கவனிக்க வேண்டும்.குடித்துவிட்டு சாலையில் விழுவது, குடித்து விட்டு வண்டி ஓட்டுவது, வீட்டில் உள்ள பெண்களை அடிப்பது, இந்த குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாதனைகளை படைக்க வேண்டிய இளைஞர்கள், குடிப்பதில்லை என்ற சபதத்தை ஏற்றால்தான், இந்த சமூக அவலம் இனி ஒழியும்.
3. சென்னை உட்பட தென்மாநில நகரங்களில், 17 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த அழுத்த நோயாளிகளும் அதற்கு சமமான அளவில் உள்ளனர்' என, மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.சென்னை ஆவடி அருகே உள்ள தேசிய நோய் பரவல் ஆய்வு மையத்தில், இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. நிறைவு கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள், "தென்மாநிலத்தவர்களிடையே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அதிகரித்து வருவது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என,தெரிவித்தனர்.
4. வங்கியிலிருந்து பெறப்பட்ட, 500 ரூபாய் நோட்டு கட்டில், 100 ரூபாய் நோட்டு திணிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன், உள்ளூர் வங்கி ஒன்றிலிருந்து, வீட்டுமனை வாங்க, ஏழு லட்ச ரூபாய் பணம் எடுத்தார்.
அவ்வளவு பணத்தையும் கணக்கெடுக்க சிரமம் என்பதால், கேஷியர் பணம் எண்ணும் இயந்திரத்தில்,ரூபாய் கட்டுக்களை நுழைக்கும்போதே பார்த்து, ஒப்புக் கொண்டு, பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு, பிளாட் உரிமையாளரிடம் பணம் கொடுத்தபோது தான்,அதிர்ச்சி காத்திருந்தது. 500 ரூபாய் கொண்ட ஒரு கட்டின் இடையில், 100 ரூபாய் நோட்டுகள், 10திணிக்கப்பட்டு, 4,000 ரூபாய் குறைந்த நிலையில், நூதன முறையில் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பணம் எடுத்த வங்கியில் கேட்டபோது, அந்த பணம் உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து,வங்கிக்கு பணப் பரிமாற்றம் மூலம் வந்தது, "சிலிப்' மூலம் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டதற்கு, "அதுபோன்ற தவறு, எங்கள் வங்கியில் நடக்காது' என, கறாராக கூறிவிட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, நூதன ஏமாற்றம் கண்டறியப்பட்டதால், தவறு எங்கு நடந்தது என, துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல், வங்கி அதிகாரிகள் திணறிப் போயினர். வங்கியில் பணம் எடுக்கும்போது,சீலிடப்பட்ட பணக் கட்டாக இருந்தாலும், அதை அங்கேயே பிரித்து, ஆய்வு செய்து எடுத்து வருவதே நல்லது.
5. திருத்தங்கல் அருகே சத்யா நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சித்துராஜபுரம் தனசேகர் (51) தலைமையாசிரியராக உள்ளார். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். கடந்த சனிக்கிழமை தனசேகர் சில்மிஷம் செய்ததை பொறுக்க முடியாத மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். நேற்று காலை 9 மணிக்கு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். தலைமையாசிரியர் தனசேகர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தனசேகரை மீட்டு போலீஸ் காரில் ஏற்றினார். தவறு செய்தவரை எங்கள் முன் விசாரிக்க வேண்டும் என பெற்றோர் காரை மறித்தனர்.
6. ஏப்ரல் 3ம் தேதி நள்ளிரவு... : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்பும், அரசியல்வாதிகள் ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதையும் தடுக்க தேர்தல் அதிகாரிகள், மும்முரமாக களத்தில் இறங்கியிருந்த காலம்;கடந்த ஏப்ரல் 4ம் தேதி விடிந்த போது...
திருச்சியில், ஆர்.டி.ஓ., சங்கீதா தனி ஆளாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஐந்து கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஏப்ரல் 3ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில், திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு மொபைலில், அடையாளம் தெரியாத நபர் அழைத்துள்ளார். அவர், "பொன்னகரில் உள்ள எம்.ஜே.டி., ஆம்னி பஸ் அலுவலகத்தில் நிற்கும் ஒரு ஆம்னி பஸ்சில், 20 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது' என்ற தகவலை மட்டும் தெரிவித்து விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இரவு 2 மணிக்கு யாரையும் அழைக்காமல், ஆர்.டி.ஓ., சங்கீதா, டிரைவர் துரையுடன் எம்.ஜே.டி., அலுவலகம் சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த மூவர், தப்பியோடி விட்டனர். அங்கு நின்றிருந்த ஆம்னி பஸ்களில், "2828' என்ற எண்ணுள்ள பஸ்சின் மேற்கூரையில், தன்னுடன் வந்த டிரைவரை சோதனை செய்யச் சொன்னார். அங்கு, ஐந்து பேக்குகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசை அழைத்து வர, தனது ஜீப்பில் டிரைவரை அனுப்பிவிட்டு, தான் மட்டும் தன்னந்தனியே பஸ்சுக்கு காவலிருந்தார்.
சிறிது நேரத்தில், மூன்று போலீசாருடன் டிரைவர் வந்து சேர, சங்கீதா தனது டிரைவர் உதவியுடன் ஆம்னி பஸ்சை அலுவலகத்துக்கு கொண்டு போய் சேர்த்த பிறகே, தேர்தல் கமிஷன், மாவட்ட கலெக்டர், தேர்தல் பார்வையாளர்கள் என, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின், ஐந்து பேக்குகளில் இருந்த பணத்தை எண்ணிய போது, ஐந்து கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் இருந்தது. இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தலின் போது, இவ்வளவு பெரிய தொகையை யாரும் கண்டுபிடித்ததில்லை என்பதால், ஒரேநாளில் திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, தேசிய அளவில் புகழ் பெற்று விட்டார்.
அதோடு சங்கீதா தனது அதிரடி நடவடிக்கையை நிறுத்தவில்லை. நவல்பட்டு அருகே, அரசுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ஆக்கிரமித்திருந்தவர்களிடமிருந் து மீட்டார். எம்.பி.,யின் உறவினர் போர்வையில் மணல் கடத்தியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தார். இதே போல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதை பாராட்டித்தான், தமிழக அரசு,வீர தீர செயல்களுக்காக வழங்கும், "கல்பனா சவ்லா' விருதை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
7. சென்னை: போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், மாணவ, மாணவிகள் காரில் தனியாக இருந்ததை பார்த்து எச்சரித்து அனுப்பினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது கடற்கரை ஓரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சாலைகளில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு தனியாக நிற்கும் கார் மீது சந்தேகம் வந்து கார் அருகே சென்றார்.
காருக்குள் உருவங்கள் தெரிந்தன. இதனால் காரை சுற்றி வளைத்தனர். அப்போது, காரின் முன் இருக்கையில் ஒரு ஜோடியும், பின் இருக்கையில் மற்றொரு ஜோடியும் இருந்தது. அவர்கள் காதல் ஜோடிகள் என்று தெரியவந்தது. இரு ஜோடிகளும் அரை, குறை ஆடைகளில் இருந்தனர். விசாரணையில், இரு பெண்களுமே பிளஸ் 2 மாணவிகள். ஆண்களில் ஒருவர் கல்லூரி மாணவர், மற்றொருவர் பட்டதாரி வாலிபர்.
இதனால் மாணவிகளை எச்சரித்த போலீசார், உடனடியாக போலீஸ் வாகனத்தில் அவர்கள் வசிக்கும் பகுதி வரை அழைத்து சென்று, Ôஇனிமேல் இதுபோன்ற காரில் சுற்றுவது தெரியவந்தால், பெற்றோரிடம் சொல்வோம்Õ என்று எச்சரித்து அனுப்பினர்.
ஆனால், மாணவிகளுக்கு வயது 17 கூட ஆகவில்லை. ஆண்களில் ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். மற்றொருவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்று தெரியவந்தது. அவர்கள் காதல் என்ற போர்வையில் இதுபோன்று மாணவிகளிடம் தவறாக நடப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவர் மீதும் சிறு வழக்கு பதிவு செய்து, கடும் எச்சரிக்கைக்கு பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.





0 comments:
Post a Comment