குப்பையில்லா திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
நமது பங்களிப்பு என்ன?
நமது பங்களிப்பு என்ன?
மூன்று மாதத்தில் சென்னையை தூய்மையாக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. மாநகரவாசிகள் காதில் விழுந்ததா விழாத மாதிரி நடமாடுகிறார்களா என்பது தெரியவில்லை. ஆட்டோவில் மீட்டருக்கு மேல் கேட்டால் நடவடிக்கை; ஹெல்மட் போடாவிட்டால் அபராதம்; கூவத்தை சுத்தம் செய்வோம்; நடைபாதை நடப்பதற்கே & மாதிரியான பல அறிவிப்புகளை அவர்கள் அடிக்கடி கேட்டிருக்கிறார்கள். ஒன்றுகூட முழுமையாக செயல்வடிவம் பெறவில்லை. அதனால் பெரிதாக எதையும் எதிர்பார்க்காமல் வாழ பெரும்பாலான மக்கள் பழகிவிட்டார்கள்.
இதற்காக அரசு மீது அவர்களுக்கு கோபம் இல்லை. வலிமையான அதிகார கட்டமைப்பு கொண்ட அரசின் செயலாற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் உண்டு என்ற தெளிவால் வந்த அமைதி அது. ஏன் இப்படி நடக்கிறது? பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அரசின் திட்டங்கள் வெற்றி பெறாமல் போகின்றன என அதிகாரிகள் காரணம் சொல்கின்றனர்.
விழிப்புணர்வு பிரசாரம் செய்து மக்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தாமல் வெறும் சட்டங்களால் எந்த பலனும் ஏற்படாது என அறிவுஜீவிகள் வாதிடுகின்றனர். இரு தரப்பினரின் வாதங்களும் பலவீனமானவை. விழிப்புணர்வு முயற்சிகள் வீணாய் போன பிறகுதான் சட்டம் இயற்றுகிறது அரசு. அந்த சட்டத்தை தயவு தாட்சண்யம் பாராமல் அமல்படுத்த வேண்டிய அதிகார வர்க்கம், ஒத்துழைப்பு தரவில்லை என மக்கள் மீது பழியை போடுவது அநியாயம்.
குப்பையை உருவாக்குவது பொதுமக்கள். வீடு, கடை, அலுவலகம், ஓட்டல் ஒ வ்வொரு இடத்திலும் ஒரு விதமான குப்பை. குப்பைக்கு அழிவில்லை என்பார்கள். அதிகபட்சமாக அதை இடம் அல்லது உருவம் மாற்றலாமே தவிர அடியோடு அழித்துவிட முடியாது. அதனால்தான் குப்பை ஒழிப்பு என்று பெயரிடாமல் குப்பை நிர்வாகம் & வேஸ்ட் மானேஜ்மென்ட் & என குறிப்பிடுகின்றனர்.
அதில் குறைத்தல் (ரெடியூஸ்), திரும்ப பயன்படுத்துதல் (ரீயூஸ்), மறுசுழற்சி செய்தல் (ரீசைக்கிள்) என்ற மூன்று அடிப்படை விதிகளை வகுத்துள்ளனர். உதாரணமாக, பிளாஸ்டிக் கவர்களுக்கு ஏற்கனவே தடை இருக்கிறது. அதை கண்டிப்புடன் அமல்படுத்தினால் பாதி குப்பை குறையும். சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த இரும்புக்கு நிகரான உறுதி வேண்டும். அந்த உறுதிக்கு தேவை எதற்கும் வளையாத நேர்மை.
தெருக்களை சுத்தம் செய்வது, மண் எடுத்து நிரப்புவது, கட்டிட கழிவுகளை அகற்றுவது, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் மட்டுமே தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், தமிழக அரசின் இத்திட்டம் மூலம் ஒரே இடத்தில் 32க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடனும், விரைவாகவும் பணிகளை செய்கின்றனர். இப்பணிகள் அடுத்த 45 நாட்களுக்கு தொடரும் என்றார். பொது மக்களும் இதில் பங்கு கொண்டு தங்களால் ஆன ஒதுழைப்பை தொடர்ந்து வழங்கினால் நகரமே சுத்தமாகி நோய்கள் பெருகுவதை தொடர்ந்து தவிர்க்கலாம் என்பது உண்மைதானே ?





0 comments:
Post a Comment