Tuesday, August 16, 2011

34 விரல்களுடன் பிறந்த குழந்தை! (படங்கள் இணைப்பு)

 

இந்தியாவில் குழறந்தையொன்று 34 விரல்களுடன் பிறந்ததன் மூலம் புதிய கின்னஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளது.இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அக்ஸாட் சக்ஸேனா என்ற இந்த ஆண் குழந்தைக்கு இப்போது ஒரு வயதாகிறது.



குறித்த குழந்தையின் இரு கைகளிலும் தலா 7 விரல்கள்  காணப்படுகின்றன. இரு கால்களிலும் தலா 10 விரல்கள் உள்ளன.  மொத்தமாக 34 விரல்கள் காணப்படுவதாக கின்ன உலக சாதனை நூல் வெளியீட்டு நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தை கடந்த வருடம் பெருவிரல்கள் இல்லாமல் பிறந்துள்ளது. இந்நிலையில் மேலதிக விரல்களை அகற்றுவதுன்  மூலம் பெருவிரல்களை உருவாக்கும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டனர்.

குறித்த குழந்தையின் தாயான அம்ரிடா சக்ஸேனா இது குறித்துத் தெரிவிக்கையில், 'இந்த குழந்தை எங்களது முதற் குழந்தை. ஆதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால் அவனது விரல்களை பார்த்தவுடன் நான் மிகவும் அதர்ச்சியடைந்தேன்' என்று கூறியுள்ளார்.

மரபணு கோளாறு காரணமாகவே இவ்வாறு விரல்கள் அதிகரித்துக் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் 31 விரல்களுடன் பிறந்த குழந்தையொன்று சாதனைப் படைத்தமை  குறித்து இணையத்தளத்தில் பார்வையிட்டதாக அம்ரிடா சக்ஸேனா தெரிவித்துள்ளார்.

'அதன்பின் எனது கணவரும் எனது தங்கையும் இணைந்து இணையத்தளத்தில் எமது குழந்தையின் விபரங்களை பதிவு செய்தனர்' எனவும் அவர் கூறினார்.



0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More