Wednesday, August 10, 2011

புகாரி 2297. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி)

தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல் ஃம்மாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில்

பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர்.

எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார். இப்னு தம்னா, தம்முடன் அபூ பக்ர்(ரலி)அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், 'அபூ பக்ரைப்

போன்றவர்கள் வெளியேறவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகிற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?' என்று கேட்டார். எனவே, குறைஷியர் இப்னு தம்னாவின் அடைக்கலத்தை ஏற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப்

பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தம்னாவிடம், 'தம் வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூ பக்ருக்கு நீர் கூறும்! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள்

அஞ்சுகிறோம்!" என்றனர். இதை இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூ பக்ர்(ரலி) வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதீ பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற தம் வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளி

வாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து, ஆச்சரியத்துடன்அவரை கவனிக்கலாயினர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை

ஏற்படுத்தியது. இப்னு தம்னாவை உடனே அழைத்து வரச் செய்து 'அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டில்தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித் திருந்தோம். அவர், அதை மீறித் தம் வீட்டில் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டிவிட்டார். பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்.

எனவே, அவர் தம் இறைவனைத் தம் வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறிவிட்டால் நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்து விடும்படி அவரிடம் கேளும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்ததை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூ பக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும்

(தயாராக) இல்லை!" என்று அவர்கள் கூறினார்கள். உடனே இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர்! நீர் அதன்படி நடக்க வேண்டும்! இல்லையென்றால் என்னுடைய அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார்' என்று பிற்காலத்தில் அரபியர் (என்னைப் பற்றிப்) பேசக் கூடாது என்று விரும்புகிறேன்!' எனக்

கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'உம்முடைய அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன்! அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன்!" என்று கூறினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். 'நீங்கள் (மக்காவைத்) துறந்து (அபயம் பெறச்) செல்லும் நாடு எனக்குக்

காட்டப்பட்டது. அது மலைகளுக்கிடையேயுள்ளதும் பேரீச்ச மரங்கள் நிறைந்துமான உவர் நிலமாகும்! அந்த இரண்டு மலைகள்தான் (மதீனாவின்) இரண்டு கருங்கல் பூமிகளாகும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கிச் சிலர் மதீனாவுக்குத் திரும்பி வந்தனர். அபூ பக்ர்(ரலி) ஹிஜ்ரத் செய்யத் தயாரானபோது, அவர்களிடம் 'சற்றுப்

பொறுப்பீராக! எனக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) 'என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள்

அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்!" என்றார்கள். நபி(ஸல) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக அபூ பக்ர்(ரலி) தம் பயணத்தை நிறுத்தினார்கள். தம்மிடத்திலிருந்து இரண்டு ஒட்டகங்களுக்கும் 'சமுர்' எனும் மரத்திலிருந்த இலைகளை நான்கு மாதங்கள் தீனியாகப் போட்டார்கள்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More