Tuesday, July 26, 2011

தலைப்பில் கிளிக் செய்யவும்,,,

1. தற்கொலை செய்யக் கட்டளையா?

2.தற்கொலை தாக்குதலை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?
3. தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டாஅவருக்காக
பாவ-மன்னிப்பு-தேடலாமா?
4.தற்கொலை-செய்தவருக்கு-ஜனாஸா-ொழுகை
5.தற்கொலை-செய்த-ஆத்மாவின்-நிலை
6. கற்பைக் காக்க தற்கொலை செய்யலாமா
71 results were found for query தற்கொலை.
    ----------------------------------------------------------------

மிக முக்கிய காரணம் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் தான்

சமீப காலமாக குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் பெற்றோரும்பள்ளி ஆசிரியர்களும் தான். பத்து வயது சிறுவனான மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)பெற்றோருக்கு ஒரே மகன். பட்டதாரிப் பெற்றோர்எல்லா விதத்திலும் மனோஜுக்கு நல்வழிகாட்டி. படுசுட்டிபுத்திசாலித்தனம் நிறைந்த மனோஜ்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அனைத்துத் தேர்வுகளிலும் முதல் ரேங்க். கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்வயிற்று வலி என அவஸ்தைப்பட்டவன்உள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டுபிரச்னை ஏதுமில்லை என்றுவலி நிவாரணம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டான். ஒரு சில நாட்களில், "நெஞ்சில் அடைப்பு உள்ளது. சளி தொந்தரவுகை வலிக்கிறது. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோஎனஅவன் பயந்து அழவும்அவன் பெரியம்மா (கடலூரில் உள்ளவர்)தன் தங்கையைக் குழந்தையுடன் வரவழைத்து, "காஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட்'டிடம் காட்டி உள்ளார். அனைத்து உடல் பரிசோதனை முடிவுகளையும் பார்த்த அவர்அவனையும் பரிசோதித்து விட்டு, "உடலில் ஏதும் பிரச்னையில்லைஎன்றுகுழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணரிடம்சிறப்புப் பரிசோதனை செய்து கொள்ள அனுப்பினார். பரிசோதனையில் ஏதும் குறையில்லை என்றதும்என்னிடம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

அவனிடம் தனியாக விசாரித்த போது அறிந்த உண்மை... பள்ளியில்  கல்வி முறையில், "அசைன்மென்ட்'கொடுப்பவர்கள்கேள்வி - பதிலை எழுதி வரச் சொல்கின்றனர். இவனுக்கு இன்டர்நெட் மூலம் தகவல் சேகரித்துமுதலில் படித்துத் தன் மனதில் பதிய வைத்துஅதை அவன் அம்மாவுக்குப் பாடமாக எடுக்கிறான். இதனால்கற்றது அவனுக்கு நன்கு மனதில் பதிகிறது. அதன் பின்னரேஅவன் கேள்விக்கான பதிலைதன் சொந்த நடையில் எழுதுகிறான். இதனால்அவனுக்கு ஒரே நாளில் எழுதி முடிக்க இயலவில்லை. ஆனால்ஆசிரியையோ, "அப்படியே கேள்வி-பதிலைப் பார்த்து எழுதி வாஎன்று கட்டாயப்படுத்துகிறார். இவனோ, "நான் புரிந்து கொண்டு எழுதுவது தான் சிறந்ததுபார்த்துப் பார்த்து எழுதுவதில் என்ன பிரயோஜனம்?' என்று கேட்கிறான் அவனுடைய கேள்வி ஞானமும்அறிவுக் கூர்மையும்சுறுசுறுப்பும் யாரையும் மயக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமைஅவன் வீட்டில் விஷேஷம் என்பதால்வீட்டுப்பாடம் செய்யவில்லை. மறுநாள் வகுப்புக்கு சாக்லேட்டுடன் புத்தாடை அணிந்து சென்றவனை, "என்ன காரணத்தால் வீட்டுப்பாடம் செய்யவில்லைஎன்று கூட கேட்காமல்அவனை அடித்த ஆசிரியைவகுப்புக்கு வெளியில் முட்டிபோட வைத்து தண்டனை அளித்திருக்கிறார். முதல் ரேங்க் எடுக்கும் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள இயலாமல்மனதில் மறுகியதால் தான் அவன் உடலுக்குள் இத்தனை பிரச்னையும். உரிய ஆலோசனையும்மனப்பயிற்சியும் கொடுத்ததில்மறுநாளே சகஜமாகிவிட்டான். அவன் அம்மாவும்பள்ளி முதல்வரிடம் நடந்ததைக் கூறிஇனி இத்தவறு எந்த மாணவனுக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். "முதல்வர்மாணவர்களின் நண்பன்என்று மனோஜின் அம்மா பாராட்டுகிறார்.

ஆனால்குழந்தைகளிடம் நண்பனாக நடந்து கொள்ள வேண்டியது ஆசிரியர்களும் தான் என்பதை,இவர்கள் உணரப் போவது எப்போது? 10ம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்த சாந்திக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது)பிளஸ் படிப்புக்காக சிறப்புப் பயிற்சியளிக்கும்வெளியூரில் பிரபலமானப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசை. காரணம்மேற்கொண்டு மருத்துவம் பயில வேண்டும் என்பது. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தவள்இரண்டு வாரங்களாக வாந்திவயிற்றுப் போக்குமயக்கம் என்று தொடர் உடல் உபாதைக்கு ஆளாகிவீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். மருத்துவப் பரிசோதனைகள் ஒரு பிரச்னையுமில்லை என்றதும்என்னிடம் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டாள். தனிப்பட்ட முறையில் அவளிடம் விசாரித்ததில்ஹாஸ்டலில் சக மாணவியர்அவள் உடல் தோற்றத்தையும்கிராமத்திலிருந்து சென்ற அவளின் பேச்சு முறையையும் கிண்டல் செய்ததைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்பது தெரிந்தது.

அவள் தந்தையோவீட்டுக்கோ அல்லது பிள்ளைகள் படிப்புக்கோ செலவு செய்யும் போதெல்லாம், "ஐயோ! இவ்வளவு பணம் செலவாகிறதே...என்று புலம்பிய படியே செலவு செய்வார். இதனால், "தந்தைக்குத் தான் அனாவசியமாக செலவு வைக்கிறோமோநம்மால் எதிர்பார்த்தபடி நன்கு படித்துசிறந்த மதிப்பெண்கள் எடுக்க முடியாதோஇப்படி உடல் நலமின்றி போவதால் தந்தைக்கு மேலும் செலவு வைக்கிறோமோ?' என,பல்வேறு குற்ற உணர்வுகளால் மனம் வருந்திய அவள்ஊருக்கு வந்ததும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளாள்.

அதீத மன அழுத்தம் காரணமாகஅவள் இயல்பு நிலை பாதிப்படைந்து இருந்ததால்மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுமருந்து உட்கொள்ள வேண்டும் என்றுஅவள் பெற்றோரிடம் கூறிய போது, "ஐயோ டாக்டர்... வேண்டாம்வேண்டாம். என் அப்பாவுக்கு செலவு வைக்காதீர்கள். நான் இருப்பதே வேஸ்ட். நான் சாகிறேன். இல்லையென்றால்நீங்களே என்னை மாற்றிக் கொள்ள அறிவுரை கூறுங்கள்'என்றுபெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அவளை ஆசுவாசப்படுத்திஇம்மனநிலையில் கவுன்சிலிங் செய்ய இயலாது என்பதைப் புரிய வைத்துமனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். குழந்தைகளுக்கு செலவிடுவதையே சுமையாகக் கருதலாமாஉண்மையில் குழந்தைகள் வரவால் தானேதம்பதியருக்குள் நெருக்கமும்குடும்பத்தில் பிணைப்பும்வாழ்வில் ஓர் அர்த்தமும்லட்சியமும் கிடைக்கிறதுகுழந்தை இல்லாமல் ஏங்கும் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தால் தானேபிள்ளைகள் பற்றிய பெருமை புரியும்.

மேற்கூறியவை எல்லாம்தற்போது அதிக அளவு நடந்து வரும் உண்மை நிகழ்வுகள். கல்வி வாழ்க்கைக்கு ஓர் ஆதாரம். மறுக்கவில்லை. ஆனால்கற்றுத்தரப்படும் கல்விகுதூகலமாகஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைவது முழுக்கமுழுக்க ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. பெற்றோர் அல்லது ஆசிரியர்களை நினைத்தாலே பயப்படும் வண்ணம்குழந்தைகள் நடத்தப்பட்டால்அது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த விதத்தில் உதவும்மதிப்பெண் குறைந்தாலோ அல்லது பாடங்களை எழுதி வரவில்லை என்றாலோஅதற்கான காரணம் என்ன என்று தகுந்த முறையில் கேட்டால் தானே,அக்குழந்தை மனம் திறந்து பேச முடியும்எத்தனையோ குழந்தைகள்குடிகாரத் தந்தைகளால் வீட்டில் தினம்தினம் நடக்கும் சண்டையால்மனதளவில் பாதிக்கப்பட்டுஅடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர்.

பிள்ளைகளிடம் பெற்றோர்நட்புணர்வுடன் பழக வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு மாதாமாதம் பயிற்சி அளிப்பது போல்பெற்றோருக்கும்ஆசிரியர்களுக்கும் குழந்தைகளை நல்வழியில் கையாள்வது பற்றிய பயிலரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால்மனநலம் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கைஎதிர்காலத்தில் பல மடங்காகும் என்பது உறுதி. பெற்றோரேஆசிரியர்களே... "கனிவுஎனும் பாசக் கயிறால் குழந்தைகளைக் கட்டிப் போடுங்கள். கண்டிப்பும்தண்டிப்பும் அத்துமீறும் ஒரு சிலரிடம் மட்டுமேஅளவோடு பயன்படுத்த வேண்டும். பிள்ளைகளை மதிப்போடும்,மரியாதையோடும் நடத்த வேண்டியது பெற்றோரின் இயல்பான கடமை. இதிலிருந்து தவறும் பெற்றோர்,இறுதி காலத்தை முதியோர் இல்லங்களில் தான் கழிக்க வேண்டி வரும் என்பது பட்டவர்த்தமான உண்மை. வன்முறையைத் தவிர்ப்போம்அன்பை வளர்ப்போம்.  

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More