மருத்துவ பொது கவுன்சிலிங் இன்று துவங்கியது
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான பொது மருத்துவ கவுன்சிலிங்கை வெள்ளிக்கிழமை காலை அமைச்சர் டாக்டர் விஜய் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான இடங்கள் 1653 உள்ளன.சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் 10 உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீடு இடங்கள் குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
அரசு பல்மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் 17 உள்ளன. அவற்றில் இருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்கள் வர உள்ளன.
இந்த நிலையில் இன்று பொது மருத்துவ கவுன்சிலிங் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் காலை 8.30 மணிக்கு தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கலந்து கொண்டு முதல் 10இடங்களை தேர்ந்து எடுத்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழை வழங்கினார். முதல் கட்ட கவுன்சிலிங் 6-ந்தேதி முடிவடைகிறது.
உடனுக்குடன் காலியிடங்களை அறிந்து கொள்ளலாம்
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலையில் நடந்து வரும் நிலையில், எந்தெந்த கல்லூரிகளில், எந்தெந்த பாடப்பிரிவுகள், எத்தனை இடங்கள் உள்ளன என்பதை மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்http://www. annauniv.edu/tnea2011/ இதற்கான சிறப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் எந்த பாடப்பிரிவு எத்தனை கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன என்றும், எந்த கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகள் எத்தனை இடங்களுடன் உள்ளது என்றும், ஒரு கல்லூரியின் கோட் எண்ணைக் கொடுத்ததும், அந்த கல்லூரியில் வழங்கப்படும் பாடப்பிரிவுகளின் விவரமும், ஒரு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் அறியும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்கச் செல்லும் மாணவர்கள், உடனுக்குடன் மாற்றியமைக்கப்படும் இந்த விவரத்தை பார்த்து அவர்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வு அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணினி மூலமாகவும், பெரிய திரைகள் மூலமாகவும் இதனை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வில் 100 மாணவர்கள் பொறியில் சேர்க்கை பெற்ற நிலையில், இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இன்று முதல் ஜுலை 7ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
ஜுலை 8ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மருத்துவ படிப்பிற்கான ஒதுக்கீட்டு இடங்கள்
தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ சேர்க்கை இடங்களுக்கான ஒதுக்கீட்டு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மொத்த சேர்க்கை இடங்களில், ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து முழுமையான தகவல் அரசு இணையதளத்தில் www.tnhealth.orgவ ெளியிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரி கல்வி கட்டணம் அதிகரிப்பு
நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தில் 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி பாலசுப்ரமணியன் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ், தற்போது 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், இந்த ஆண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள அன்னபூரணி மருத்துவக் கல்லூரி,தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தவிர, ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகள்,தங்கள் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த கோரியிருந்தன.
இதை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில், நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழு விரிவாக ஆராய்ந்தது.
இக்குழுவின் தலைவர் நீதிபதி பாலசுப்ரமணியன், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, 2011-12ம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் குறித்து, நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீமூகாம்பிகை மருத்துவ அறிவியல் நிறுவனம், தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி(திருச்சி) ஆகிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான ஆண்டு கல்விக் கட்டணம், 2 லட்சத்து 25ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவர் நீதிபதி பாலசுப்ரமணியன், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, 2011-12ம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் குறித்து, நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீமூகாம்பிகை மருத்துவ அறிவியல் நிறுவனம், தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி(திருச்சி) ஆகிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான ஆண்டு கல்விக் கட்டணம், 2 லட்சத்து 25ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரி, அன்னபூரணி மருத்துவக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கல்விக் கட்டணமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் மாற்றம் இல்லை. பெருந்துறை ஐ.ஆர்.டி.டி., மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு கோரவில்லை. இந்த கல்விக் கட்டணம், நடப்பு கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு நீதிபதி பாலசுப்ரமணியன் கூறினார்.





0 comments:
Post a Comment