பெற்றோர்களை பேணுதல்
அவசியம் கேளுங்கள் - > http://youtu.be/Wvyewslz1Sg
,
(முஹம்மதே)வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக!. தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன்: 29:45)
உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்க விடுமா? என்று கேட்டார்கள். அவரது அழுக்குகளில் எதையும் தங்க விடாது என்று மக்கள் பதிலளித்தார்கள். இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூஹூரைரா(ரலி) புகாரி 528, முஸ்லீம் 1185)
சென்னை, ஜூன் 13:
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ்,ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு
எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. அறக்கட்டளை ஒன்றுக்காக வெளிநாடுகளில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. எழும்பூர் கூடுதல்
தலைமை பெருநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஜவாஹிருல்லாஹ்
குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே, அவர்களுக்கு எதிராகப்
பிடி ஆணைப் பிறப்பித்து நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.
மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி
வியாழக்கிழமை (ஜூன் 16) வழங்கப்படவுள்ளது.
இந்த உரத்தினால் காய்கறி மற்றும் அலங்காரச் செடிகளை செழிப்பாக வளர்க்க முடியும்.
வீட்டிலிருப்போர், மாணவர்கள், தொழில் முனைவோர், குடும்பத் தலைவிகள்
என அனைவரும் பயிற்சியில் பங்கேற்கலாம்.பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர்
தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், 44, ஆறாவது அவென்யு,
அண்ணாநகர், சென்னை-40. தொலைபேசி: 044-2626 3484, 4217 0506.
|





0 comments:
Post a Comment