Thursday, June 23, 2011

வாழும் வழி


அஸ்ஸலாமு அலைக்கும்,,,


ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ர­லி), நூல்: புகாரி 5984



1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. 
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும்மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. 
இயற்கை உணவைபழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. 
உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. 
தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. 2009
விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7. 
ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. 
குறைந்தது மணி நேரம் தூங்குங்கள்.

9. 
குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.


தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்



10. 
உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. 
எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. 
உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. 
மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. 
நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. 
அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. 
கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. 
வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. 
எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. 
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. 
முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.


சமூகம்.



21. 
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும்நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோகடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. 
மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 
வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. 
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. 
உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.


வாழ்க்கை



26. 
உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. 
ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. 
உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. 
உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோஎது அழகை கொடுக்காதோநிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. 
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
-----------------------------------------------------------------------------


 மரம் வளர்க்கலாம் வாங்க!

சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்க வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். வீட்டை சுற்றிலும் மரங்கள்செடி கொடிகள் இருந்தால்வீட்டின் அழகு மேலும் மெருகு பெறும் - என்ன சந்தேகம்?
ஆனால்வீட்டைச் சுற்றிலும் குறுகிய இடங்களேஇடவசதியே உள்ளது எனில்அதில் மரங்கள் நட்டால் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படலாம். எனவேவீடு அருகே மரம் நடும்போதுசில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக மரங்கள் இரண்டு விதமான வேர்களில் தாங்கி நிற்கின்றன. ஒன்று பக்கவாட்டில் பரவும் வேர். மற்றொன்று ஆணிவேர். பக்கவாட்டில் பரவும் வேர் ரக மரங்களை நடும்போதுகட்டடத்தில் இருந்து குறைந்தது 10 அடி இடைவெளியாவது தேவை. இல்லையெனில்பக்கவாட்டில் பரவும் வேர்களால் கட்டடத்திற்கு ஆபத்து ஏற்படும்.
ஆணிவேர் ரக மரம் எனில்ஐந்து அடி இடைவெளி போதுமானது. அதே நேரத்தில்அனைத்து வகையான மரங்களையும் வீட்டு மனைக்குள் நட்டு வளர்க்கக் கூடாது.
மாபலாவாழைதென்னைவேம்பு, கொய்யா மரங்களை வீட்டு மனைக்குள் வளர்க்கலாம். ஆலமரம்,அரச மரம்வில்வ மரம்பனைபுளிபாக்கு மரங்களைவீட்டு மனைக்குள் நட்டு வளர்க்கக் கூடாது.
செடிகளில் எருக்குகள்ளி செடிகள் வீட்டு மனைக்குள் வளராதவாறு கவனிக்க வேண்டும். ரோஜாமல்லிகைதுளசிகுரோட்டன்ஸ்முல்லைகாய்கறி செடிகள்மஞ்சள்செம்பருத்தி போன்றவற்றை வீட்டு மனைக்குள் நட்டு வளர்க்கலாம்.
பொதுவாகவீட்டு மனையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் மரம் நடுவதை தவிர்க்க வேண்டும். இது காலை வெயில் வீட்டில் விழுவதை தடுக்கிறது. இதனால் காலை வெயிலில் நிறைந்துள்ள வைட்டமின் சக்தி வீட்டில் வசிப்பவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. இதற்கு பதிலாக வீட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மரம் மற்றும் செடிகொடிகளை நட்டு வளர்க்கலாம்.
மரங்கள் நடுவதற்கு இடவசதி இல்லாதவர்கள்காய்கறி செடிகள்பூச்செடிகள் போன்றவைகளை வளர்த்து வீட்டின் அழகை கூட்டலாம். மரம் என்பது இயற்கை தந்த வரம். மனிதன் தன் சந்ததிக்கு,உலகிற்கு மிக எளிமையாக செய்யக் கூடிய நன்மை மரம் வளர்ப்பது.




0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More