நிச்சையமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது".
(அல் குர்ஆன் 4:103)
ஃபஜ்ர் எனும் அதிகாலை நேரத் தொழுகை
"ஒருவர் சூரியன் உதிப்பதற்கு முன் சுபுஹுடைய ஒரு ரக்அத்தை முடித்து விட்டால் அவர் சுபுஹுடைய தொழுகையை அடைந்து விட்டார்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: நஸயீ, திர்மதீ
லுகர் எனும் மத்திய நேரத் தொழுகை
"ஜிப்ரில்(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு தொழுகை நேரம் பற்றி கற்றுக் கொடுக்கும் போது முதல் நாளன்று சூரியன் சாயத் துவங்கியதும் தொழ வைத்தார்கள். மறுநாள் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வந்த போது தொழ வைத்தார்கள். இவ்விரன்டிக்கும் இடைப்பட்ட நேரமே லுகார் என்றார்கள்".
அறிவிப்பவர்:ஜாபிர்(ரலி)
நூல்: நஸயீ, திர்மதீ
அஸர் எனும் மாலை நேரத் தொழுகை
"அஸருடைய நேரம் சூரியனின் ஒரு பகுதி மறையத் துவங்கி மஞ்சள் நிறமாக மாறும் வரையாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரலி)
நூல்: முஸ்லிம்
மக்ரிப் எனும் அஸ்தம நேரத் தொழுகை
"மக்ரிபுடைய நேரம் அடி வானத்தின் செம்மை மறையும் வரை இருக்கும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இபுனு உமர்(ரலி)
நூல்: முஸ்லிம்
இஷா எனும் இரவு நேரத் தொழுகை
"ஜிப்ரில்(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு தொழுகை நேரம் பற்றி கற்று கொடுக்கும் போது முதல் நாளன்று அடிவானத்தின் செம்மை மறைந்த போது இஷா தொழ வைத்தார்கள். மறு நாள் பாதி இரவு முடிந்ததும் அல்லது இரவின் மூன்றில் ஒரு பகுதி முடிந்ததும் இஷா தொழ வைத்தார்கள்."
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
நூல்:அஹ்மத்,திர்மதீ
தொழ கூடாத நேரங்கள்
"சூரியன் உதிக்கத் துவங்கியதிலிருந்து முழுமையாக உதிக்கும் வரையிலும், சூரியன் உச்சியிலிருக்கும் போதும், சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து முழுமையாக மறையும் வரையிலும் ஆகிய மூன்று நேரங்களிலும் தொழுவதற்கும் இறந்தோரை அடக்கம் செய்வதற்கும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்".
அறிவிப்பவர்: உக்பா(ரலி)
நூல்: முஸ்லிம்





0 comments:
Post a Comment