தவறவிட்ட தொழுகைகளை மொத்தமாக ஒரே நேரத்தில் சேர்த்து தொழுவதை களாத் தொழுகை என்கின்றனர். இப்படி தொழுவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.
தொழுகைகளை அதனதன் நேரத்திலேயே தொழ வேண்டும் என்றே இறைவன் கட்டளையிடுகிறான்.
"குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது". (அல்குரான் 4 :103 )
எனவே தொழுகையை அதனதன் நேரங்களிலேயே தொழுது விட வேண்டும். தவறி விடக் கூடாது எனினும், தூகத்திநாளோ அல்லது மறதிநாளோ தொழுகையை தவறவிட்டுவிட்டால் அது நினைவு வரும்போதோ,விளிக்கும்போதோ உடனே நிறைவேற்றிட வேண்டும்.
"உங்களில் எவரேனும் தொழுகையை விட்டும் உறங்கி விட்டால் அல்லது மறந்துவிட்டால் நினைவு வந்ததும் தொழட்டும்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல்:முஸ்லிம்





0 comments:
Post a Comment