கறுப்பு பணத்தை ஒழிக்க உங்களால் முடிந்த ஆலோசனைகளை எழுதுங்கள்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்து, மக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, மத்திய அரசு,புதிய மின் அஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளது. கறுப்புப் பண விவகாரத்தில், மக்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன் மூலம் அப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, bmfeedback@nic.
உலகில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.
உலகளவில் பல நாடுகளில், பலதரப்பட்ட துறைகளில் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அயல்நாடுகளில் பணிபுரிவோர், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் பணம் அனுப்பி வருகின்றனர்.
வெளிநாடுகளில் பணிபுரிவோர், தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வரும் பணம் குறித்து உலக வங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. 'இடம் பெயர்ந்தோர் மற்றும் பணமளிப்பு விவரம்' என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ளோர், தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஆண்டுதோறும், இந்தியர்கள், தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவது அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டிற்கு 5,500 கோடி டாலர் (2 லட்சத்து 53ஆயிரம் கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய ஆண்டு 4,960 கோடி டாலராக (2 லட்சத்து 28ஆயிரத்து 160 கோடி ரூபாய்) இருந்தது.இதில், சவூதி அரேபியா, பஹ்ரைன்,குவைத், கத்தார், மஸ்கட்,ஓமன் நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
இந்நாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் தாயகத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு 1,104 கோடி டாலர் (50ஆயிரத்து 784 கோடி ரூபாய்) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டில் 940 கோடி டாலராக (43ஆயிரத்து 240 கோடி ரூபாய்)இருந்தது.துபாயில் உள்ள யூ.ஏ.ஈ எக்ஸ்சேன்ஜ் நிறுவனம்,ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் வளைகுடா கூட்டுறவு கழகத்தை சேர்ந்த நாடுகளின் அன்னியச் செலாவணி பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ”திர் குமார் ஷெட்டி கூறுகையில்,' அயல்நாட்டு பணியாளர்கள், சென்ற 2010ம் ஆண்டில்2,500 கோடி - 3,000 கோடி டாலர் (ஒரு லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபா# - ஒரு லட்சத்து 38ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு தாய்நாட்டிற்கு பணம் அனுப்பியுள்ளனர்' என்று தெரிவித்தார்.ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் அயல் நாட்டினர், கடந்த 2010ம் ஆண்டு தங்கள் தாயகத்திற்கு 1,054 கோடி டாலர் (48ஆயிரத்து 484 ரூபா#) அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2009ம் ஆண்டு 951கோடி டாலராக (43ஆயிரத்து 746 கோடி ரூபாய்) இருந்தது. இந்த வளர்ச்சியை, கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டின் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். கட்டுமானம் மற்றும் அது சார்ந்த துறைகளைத் தவிர்த்து, வணிகம், விருந்தோம்பல் மற்றும்”ற்றுலாத் துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இது, அயல்நாட்டவருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க துணைபுரிவதாக உள்ளது என, ”திர் குமார் ஷெட்டி மேலும் கூறினார்.
என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன்3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ.,தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.
என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.
|





0 comments:
Post a Comment