Sunday, June 26, 2011

குரான் முன்வைக்கும் சவால்கள்

a Part speech from தனித்து விளங்கும் இஸ்லாம் by P Jainulabdeen to Watch as Playlist


1.உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுங்கள்

2. ஊழல்லஞ்சம் தொடர்பான விடியோஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி

1. உங்கள் பொழுதுபோக்கு என்ன?'' என்று யாராவது உங்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்களா?நிச்சயம்  கேட்டிருப்பார்கள். நண்பர்கள்உறவினர்கள்ஆசிரியர்கள்மற்றும் உங்களுக்கு அறிமுகமானவர்கள் என யாராவது இப்படி உங்களைக் கேட்டிருப்பார்கள். அப்போது நீங்கள் என்ன பதில் சொல்லியிருப்பீர்கள்ஒரு நொடி யோசித்துப் பாருங்களேன். என்னஏதாவது நினைவுக்கு வருகிறதா?
பொழுதுபோக்கு என்று ஒன்று இருக்கிறதா?'' என உங்களில் சிலர் குழம்பியிருக்கக்கூடும். சிலரோ தயக்கத்துடன், ""தொலைக்காட்சி பார்ப்பது''என்று சொல்லியிருக்கக்கூடும். சிலர், ""புத்தகம் படித்தல்,சுற்றுலா செல்லுதல்வானொலி கேட்டல்அஞ்சல் தலை சேகரித்தல்...'' என்று ஏதாவது ஒன்றைச் சொல்லிகேள்வி கேட்டவர்களை பூரிப்புடன் பார்த்திருக்கலாம்.
உண்மைதான். பலவகையான பொழுதுபோக்குகள் இருக்கின்றன. நூல்களைப் படித்தல்இயற்கைக் காட்சிகளை ரசித்தல்பறவைகளைக் கவனித்தல்ஓவியம் வரைதல் தோட்டம் போடுதல்,புகைப்படங்கள் சேகரித்தல்அஞ்சல் தலைகளைச் சேகரித்தல்வாழ்த்து அட்டைகளைச் சேகரித்தல்,தீப்பெட்டிப் படங்களைச் சேகரித்தல்விளையாடுதல் என்று நூற்றுக் கணக்கான பொழுதுபோக்குகள் இருக்கின்றன.
பெரியவர்களைவிடசிறியவர்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைக்கிறது. அந்த ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதற்கு இவ்வகையான பொழுதுபோக்குகள் உதவுகின்றன. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிடவும் பொழுதைப் பயன்படுத்துவது என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும். நண்பர்களோடு தேவையில்லாமல் ஊர் சுற்றுவது,வெட்டியாகப் பேசி நேரத்தை வீணாக்குவதுதொலைக்காட்சிக்கும் வீடியோ விளையாட்டுக்கும் அடிமையாவதுஎப்போது பார்த்தாலும் கைப்பேசியில் பேசி காலத்தை விரயமாக்குவது போன்ற பழக்கங்கள் குழந்தைகளையும் இளைஞர்களையும் கெடுக்கின்றன. இதுபோன்ற தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிடாமல் இருக்கவேண்டும் என்றால்சிறு வயதிலேயே உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது.
பொழுதுபோக்கினால் என்ன நன்மை விளையும் என்று நீங்கள் கேட்கக்கூடும். பொழுதுபோக்குகள் உங்கள் வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக மாற்றிவிடும் தன்மை படைத்தவை. நீங்கள் அலட்சியமாகக் கடைபிடிக்கத் தொடங்கும் சில பொழுதுபோக்குகளே பிற்காலத்தில் உங்கள் தொழிலாகவும்உங்கள் அடையாளமாகவும் மாறிவிடலாம். உங்களை புகழ்பெற்றவராக மாற்றிவிடலாம். இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இன்று பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களாய் புகழ் பெற்றிருக்கின்ற யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சிறு வயதிலேயே தமது துறை மீது ஆர்வத்துடன் இருந்திருப்பது தெரிய வரும். அது மட்டும் அல்லபொழுதுபோக்குகள் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றும். பொறுமையையும் உடல் உழைப்பையும் கற்றுத் தரும். புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி அறிவைப் பெருக்கும். நேரத்தின் அருமையை உணர்த்தும்.
இசைநாட்டியம்ஓவியம் வரைதல்நாடகம்போன்றவற்றை பொழுதுபோக்காகக் கொண்டால் எதிர்காலத்தில் நீங்கள் கலைஞர்களாகலாம். நாணயங்களையும்அஞ்சல் தலைகளையும் சேகரித்தால் வரலாற்று அறிஞராகவோஆய்வாளர்களாகவோ ஆகலாம். புகைப்படங்களையோ,தீப்பெட்டிப் படங்களையோவாழ்த்து அட்டைகளையோ சேகரித்தால் புகைப்படக் கலைஞராகவோ,வடிவமைப்பாளராகவோ மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் புத்தகம் படிப்பவராவானொலியிலும் தொலைக்காட்சியிலும் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளைக் கவனிப்பவராஅப்படியென்றால் எதிர்காலத்தில்  நீங்கள் எழுத்தாளராகவோ பத்திரிகையாளராகவோ ஆகலாம். நீங்கள் பறவைகளின் இறகுகளைச் சேகரிப்பவராபறவைகளை உற்று நோக்கி அறிவதில் ஆர்வமுடையவராஅப்படியென்றால்நீங்கள் எதிர்காலத்தில் பறவையியலாளர் சலீம் அலியைப்போன்று வருவீர்கள். நான் ஏதோ சோதிடம் சொல்வதாக நினைக்க வேண்டாம். இப்படித்தான் நடக்கும் என்று மிக உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும்இப்படி நடப்பதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. ஏனெனில்பயிற்சியும் விருப்பமும்தான் ஒருவரை ஒரு துறையில் ஈடுபட வைக்கிறது. அவர் அத்துறையில் சிறப்பிடம் வகிக்க அடித்தளமாக அமைகிறது.
பொழுதுபோக்குகள் - உங்களின் வாழ்க்கை முறைநீங்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் வசதிகள்உங்கள் பெற்றோர்நண்பர்கள்ஆசிரியர்கள் ஆகியோரின் வழிகாட்டல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன.
நீங்கள் காட்டுப் பகுதியில் வாழ்பவராக இருந்தால் பல வகையான இலைகளையும்,விதைகளையும்பறவைகளின் இறகுகளையும் சேகரிக்கும் பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ளலாம். ஒரு மயில் இறகையோஅல்லது ஒரு மைனாவின் இறகையோ வருடிப் பார்த்திருக்கிறீர்களாஅவற்றின் மென்மைக்கு இணையாக இவ்வுலகில் எந்தப் பொருளையுமே சொல்லமுடியாது. இறகுகளின் நிறங்களும்வடிவங்களும்அமைப்பும் நம்மைக் கவர்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை பறவைகளின் வாழ்க்கையையும் சுற்றுச் சூழலையும் நமக்குச் சொல்லித் தருகின்றன. நீங்கள் மலைப் பகுதியில் வாழ்பவராக இருந்தால் பல வகையான கற்களைச் சேகரிக்கலாம். கற்களில் இருக்கின்ற வேதிப் பொருட்களுக்கு ஏற்ப அவற்றின் நிறங்களும் வரி வடிவங்களும் மாறுபடுகின்றன.
ஆற்றங்கரையில் வாழ்பவர்களுக்கும்கூட பல வகையான கூழாங்கற்களும்கற்களும் கிடைக்கும். இவற்றை சேகரிப்பதன் மூலம் புவியைப் பற்றியும்பல வகையான பாறைகளைப் பற்றியும் மண் வகைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவு வளரும். நகரத்திலோ நகரை ஒட்டிய பகுதிகளிலோ வாழ்பவர்களுக்கு அஞ்சல் தலைவாழ்த்து அட்டைதீப்பெட்டிப் படங்கள்போன்றவற்றை சேகரிப்பது எளிது. பழைய நாணயங்களைக்கூட சேகரிக்கலாம். பழைய பொருட்கள் விற்கிற கடைகளில் பழங்கால நாணயங்கள் நிறையக் கிடைக்கும். நகரத்தில் வாழ்பவர்களுக்கு பிரபலமானவர்களின் கையெழுத்துகளைச் சேகரிப்பதும் எளிமையானதுதான். பிரபலமானவர்களின் நிகழ்ச்சிகளை நாளேடுகளைப் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அங்கு சென்று நேரில் சந்தித்து கையெழுத்து பெறலாம்.
பணக்காரர்கள் விலையுயர்ந்த பொருட்களைச் சேர்ப்பார்கள். நடுத்தர வர்க்க மக்களும்ஏழைகளும் தமது வருவாய்க்கு ஏற்ப வாழப் பழகுவார்கள். அதுபோலத்தான் உங்கள் சூழல்கிடைக்கும் நேரம்,பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து நீங்கள் ஏதாவது ஒரு பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தினசரி வாழ்வில் ஒரு மாற்றம் தெரியத் தொடங்குவதை உணர்வீர்கள். வாழ்வின் அழகுகள் தெரிய வரும். நம் வாழ்க்கையின் பொருள் புரியும்.
குழந்தைகளேநீங்கள் உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முன் ஒரு சிறிய வேலை. பொழுதுபோக்குகளுக்கு ஆங்கிலத்தில் தனித்தனி பெயர்கள் உண்டு. அஞ்சல் தலை சேகரிப்பு. பழைய பத்திரங்கள் மற்றும் நிதி ஆவணங்களைச் சேகரித்தல். நாணயங்கள் சேகரிப்பதும் அதைப் பற்றிப் படிப்பதும்.  

 2.ஊழல்லஞ்சம் தொடர்பான விடியோஆடியோ பதிவுகளுடன்    புகார் செய்யும் வசதி

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை
(Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது.
இதில் ஊழல்லஞ்சம் தொடர்பான விடியோஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.
மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது. ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும்.  
ஊழலற்ற நடைமுறைபொது வாழ்வில் ஒழுக்கம் போன்ற தார்மிக நெறிகள் குறித்த கல்வி பள்ளிகளில் பாடமாகச் சேர்க்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  
மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான  www.cvc.nic.in ல்  "விக்-ஐகுறித்த தகவல்களைப் பெற முடியும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More