Sunday, June 26, 2011

பயனுள்ள கல்விச் செய்திகள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு படித்தவர் களுக்கு !



ஜூலை முதல் பி.இ.பட்டப்படிப்பிற்கான பொது கவுன்சிலிங் :
மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

பி.இ.பட்டப்படிப்பிற்கான பொது கவுன்சிலிங்ஜூலை 8ம் தேதி துவங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்இந்த கவுன்சிலிங் 35 நாட்கள் நடைபெறும். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கிற்காகஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள்: இந்த கவுன்சிலிங்கின் ஒரு பகுதியாகவெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூன் 20ம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில்வளைகுடா நாடுகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு 5சதவீதமும்இதர நாடுகளில் வாழும் இந்திய மாணவர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்படும். மொத்தம் உள்ள 345 இடங்களில் 310 பேருக்கு நேற்று கவுன்சிலிங் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் மூலம் 148 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு: விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்குஜூன் 28, 29தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 30ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஒதுக்கீட்டு அடிப்படையில் இடம் பெற 3,457 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதர பட்டம் பெற்ற மாணவர்கள்: இதர பட்டம் பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும். இதற்கு, 5,578 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு 464 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொது கவுன்சிலிங்: இந்த ஆண்டு பிளஸ் தேறிய மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங்ஜூலை8ம் தேதி துவங்குகிறது. இதுதொடர்ந்து 35 நாட்கள் நடைபெறும். இந்த கவுன்சிலிங்கில்,தமிழகத்தில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசுக்கான ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்படும். இந்த கவுன்சிலிங்கில், 89 ஆயிரத்து 298 மாணவர்களும், 59 ஆயிரத்து 55 மாணவியரும் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 23 கல்லூரிகளில் தமிழில் பொறியியல் பாடங்கள் கற்றுத்தரப்படும். ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம்ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டை விட 5,000 இடங்கள் அதிகம். 2009ம் ஆண்டு கவுன்சிலிங் முடிந்த பிறகு 51 ஆயிரத்து 462 இடங்கள் காலியாக இருந்தன; 2010ம் ஆண்டு 31 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டு விண்ணப்ப விற்பனைஒரு லட்சத்து 78 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 509 ஆக குறைந்துள்ளது. இதில்அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணபங்கள் வந்துள்ளன.

மாணவர்களுக்கான--வழிகாட்டி
தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங்கில் பங்கு பெற அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தனித்தனியாக தகவல் அனுப்பப்படும்.
மாணவர்கள் அவர்களுடைய தர வரிசைப்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். இடம் இருப்பதைப் பொருத்து மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளைப் பெறலாம்.
மாணவர்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை கோரலாம். ஆனால் அந்த நேரத்தில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்படும்.
கவுன்சிலிங்கின்போது மாணவர்களுடைய மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும்எனவே மாணவர்கள் தங்களுடைய ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலை கவுன்சிலிங்கிற்கு எடுத்து வர வேண்டும்.
ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலைக் கொண்டுவர இயலாதவர்கள்அவர்களுடைய கல்வி நிறுவனத்திடமிருந்து அதற்கான கடிதத்தை வாங்கி வர வேண்டும்அத்துடன் கல்வி நிறுவனத்தின் கையெழுத்திடப்பட்ட மதிப்பெண் பட்டியலின் ஜெராக்ஸ் பிரதியை கொண்டு வர வேண்டும்.
குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கிற்கு வர இயலாதவர்கள்அதற்கு அடுத்த நாட்களில் பங்கு பெறலாம்ஆனால்கவுன்சிலிங்கில் பங்கு பெறும் நாளன்று கிடைக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத்தான் தேர்வு செய்ய இயலும்.

8, 10, 12ம் வகுப்பு படித்தவர் களுக்கு
கால் நடை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வி சான்றிதழ் பாடங்கள் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்விரிவாக்க கல்வி இயக்ககத்தின் தொலைநிலைக் கல்வி பிரிவின் மூலம் நடத்தப்படும் அஞ்சல் வழி கல்வி சான்றிதழ் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம் 6 மாதம் ஆகும். வெள்ளாடு வளர்ப்புக்கு மட்டும் 3 மாதம் பயிற்சி. தமிழ் மொழியில் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள்விண்ணப்பத்தில் தங்களது பெயர்அஞ்சல் முகவரிதொலைப்பேசி அல்லது செல்போன் எண், 2 புகைப்படம்சேர விரும்பும் பாடத்தின் தலைப்பு ஆகியவற்றை குறிப்பிட்டுபயிற்சி கட்டணத்தையும் சேர்த்து ‘‘விரிவாக்கம் கல்வி இயக்குனர்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்மாதவரம் பால்பண்ணை வளாகம்சென்னை&600 051’’ என்ற முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய ஜூலை 29ம் தேதி கடைசி நாள் ஆகும். பயிற்சி கட்டணத்தை ஜிலீமீ ஞிணிணிஜிகிழிஹிக்ஷிகிஷி,
நீலீமீஸீஸீணீவீ 600051 என்ற பெயரில் இந்திய அஞ்சல் ஆணை அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044&2555 4375/4555/4556/ 1586/1587 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பயிற்சியின் பெயர்    கல்வித் தகுதி    கட்டணம்
கால்நடை உற்பத்தி
பொருட்களின் தொழில்நுட்பம்    12ம் வகுப்பு    1,020
கால்நடை தீவன ஆலை
மேலாண்மை    12ம் வகுப்பு    1,020
கால்நடை மற்றும்
கோழிப்பண்ணை மேலாளர்    10ம் வகுப்பு  `  1,050
கால்நடைகளுக்கான
பசுந்தீவன உற்பத்தி    8ம் வகுப்பு    520
ஜப்பானிய காடை வளர்ப்பு    8ம் வகுப்பு    520
வான்கோழி வளர்ப்பு    8ம் வகுப்பு    520
கறவைமாடு வளர்ப்பு    8ம் வகுப்பு    220
வெள்ளாடு வளர்ப்பு    8ம் வகுப்பு    220



0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More