Sunday, June 26, 2011

வளைகுடா வாழ் சகோதரர்களே...

அஸ்ஸலாமு அழைக்கும்... வரஹ்...


வெயில் கூளிர் என்று பாராமல் கஷ்டப்பட்டு காலையில் சாப்பிடாமல் வேகம் வேகமாக வேலைக்கி சென்று அங்கு பல இன்னல்களை சந்தித்து மாலை ரூமிற்கு வந்து துணியை துவைத்து உணவு தயார் செய்து அதற்கு பிறகு  லாப்டப் அல்லது மொபைல்ல எடுத்து வீட்டிற்கு போன் செய்து எல்லோரோடும் பேசிவிட்டு நாளைய தினம் அலுவலகம் செல்ல உடுத்த கூடிய ஆடையை அயன் செய்துவிட்டு பிறகு சாப்பிட்டு விட்டு
ஒரு பன்னிரண்டு மணி அளவில் உறங்க சென்று காலையில் நமக்கு ஒதுக்க பட்ட நேரத்தில் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு மறுபடியும் காலையில் சாப்பிடாமல் வேகம் வேகமாக வேலைக்கி ஓடி சம்பாரித்து வீட்டுக்கு பணம் அனுப்பியது போக மிச்சம் இருக்க கூடிய பணத்தை ரூம் ரெண்டு தண்ணி  கரண்ட் பில்லு  கொடுத்துவிட்டு மெஸ் பணம் கொடுத்துவிட்டு மிச்சம் இருக்க கூடிய பணத்தை உதவி செய்ய
இயக்கத்திற்கு அனுப்ப கூடிய நல் உள்ளம் படைத்த  சகோதரர்களே...
 
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்... 
 
உங்கள் உறவினர்களில்... 
உங்கள் ஊர்களில்.. 
உங்கள் தெருக்களில்.. 
வசிக்க கூடியவர்கள் எத்தனை பேர் ஏழைகளாக இருப்பார்கள்...?????
அவர்களை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்... 

தயவு செய்து அவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய எங்கள் இயங்கங்கள் இருக்கிறது என்று சொல்லிவிடாதிர்கள்.. உங்கள் இயங்கங்கள் உதவுவது யாருடைய பணத்தை கொண்டு...??? உங்களுடைய பணத்தை கொண்டு அல்லவா இன்று உதவி கொண்டு இருக்கிறார்கள்.. அப்படி உதவி செய்ய கூடியவர்கள் இன்று விளம்பர படுத்தாமல் செய்து கொண்டு இருகிறார்கள?? இன்று தானம் செய்தால் கூட அதை விளம்பரபடுத்தி
விடுகிறார்களே ஏன்??? நீங்கள் இரத்தம் சிந்தி சம்பாரித்த உங்களுடைய காசுகளை கொண்டு இயக்கம் நடத்தி வருவபர்கள் நீங்கள் இங்கு ஆறு அடி கட்டிலில் மூட்டை பூச்சிகளுடன் இரவை கழிப்பதை தான் அவர்கள் அறிவார்களா...??? உங்கள் இயக்கங்களுக்கு சண்டை இட்டு கொள்ளவே தான் நேரம் சரியாக இருகிறதே சகோதரர்களே.... தானம் செய்வது பற்றிய ஹதிஸ் தெரியாதவர்களா நீங்கள்...?? ஒரு கையால் கொடுப்பது
மறு கைக்கு கூட தெரிய கூடாது என்று உள்ளதே.. அதுவெல்லாம் ஊருக்கு மட்டும் தானா????
 
சகோதரர்களே...
உங்களுடைய உதவிகளை யாரும் அறியாத வண்ணம் செய்து மறுமையில் வெற்றி அடையுங்கள் சகோதரர்களே... உங்கள் உறவினர்கள்,உங்கள் ஊர்களில் இருக்க கூடிய மக்கள் எத்தனையோ பேர் ஏழைகளாக கஷ்டத்தில் இருப்பார்கள் தயவு செய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள் சகோதரர்களே.. 
 
இப்படி மாறி மாறி வசை பாடி கொண்டு பொய்,மோசடி,பாலியல் புகார், இன்னும் பல விசயங்களுக்கு மாறி மாறி அசிங்க படுத்தி கொண்டு நம்மை 
தவ்ஹீத் வாதிகள் என்று வெளியில் சொல்ல கூட முடியாத அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டு இருக்ககூடிய இவர்களை எல்லாம் விட்டு வெளியில் வாருங்கள் சகோதரர்களே...
 
இன்னும் ஈமெயில் மூலம் சண்டை இட்டு கொள்ள கூடிய சகோதரர்களே... உங்களுடைய இயக்கத்திற்காக உங்களுடைய சகோதரத்தை இழந்து நிற்கின்றிர்களே...???? ஒரு நிமிடம் சிந்தியுங்கள் சகோதரர்களே... பக்கம் பக்கமாக இப்படி வசை பாடி கொண்டு இருப்பதால் என்ன பயன்..?? தயவு செய்து நீங்கள் செய்ய கூடிய நன்மையான காரியங்களை இதனை கொண்டு பாழடித்து விடாதிர்கள்..
 
நம் அனைவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவானாக... ஆமீன்...
 
தங்களின்... 
அனைத்து தவ்ஹீத் சகோதரர்கள் 
அமீரகம்.

குறிப்பு: இப்போது இந்த பதிவிற்கான காரணம் விரைவில் இன்னொரு கம்பெனி (இயக்கம்) திறக்க வாய்பு இருப்பதால் உங்களை உஷார் படுத்தவே இந்த பதிவு... 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More