Thursday, June 23, 2011

37.. முதுகு வலி அவதியா?


முதுகுக் கீழ்ப் பகுதியில் வலி இருந்தால் நாம் அலட்சியம் காட்டக்கூடாது. ஏனெனில் அது அப்படியே கீழிறங்கி பின் தொடைப் பகுதிகளையும் சில வேளைகளில் கால் கெண்டைச் சதைகளையும் கூட சென்றடையும்.
நாம் தினசரி காரியங்களில் முதுகு வலிக்கு ஆகாத பல விஷயங்களை அறியாமல் செய்கிறோம். உதாரணமாக கூன் முதுகிட்டு உட்காருவது, நடக்கும் போது கூன் போடுவது, பொருட்களை தூக்கும்போது முதுகை வளைப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.
தண்ணி வாளி, குடங்களை தூக்கும்போது, முதுகு நேராக இருப்பது அவசியம். வெயிட் அதிகமுள்ள பொருட்களை தூக்கும்போது நாம் முதுகை வளைத்தோமானால் தண்டுவடங்களுக்கு இடையிலான வட்டுக்களில் பாரம் அதிகரிக்கும். இதுதான் பிரச்சனை.
உட்கார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி கட்டாயம் வரும். ஏனெனில் நாம் முதுகை சற்றே வளைக்காமல் உட்கார முயற்சி செய்வதில்லை.
உங்கள் தண்டுவடத்திற்கு முட்டுக் கொடுக்கும் நாற்காலிகள் தேவை. அதேபோல் தூக்கம் அவசியம் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது கட்டாயம்.
புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. ஏனெனில் திசுக்களுக்கு தேவையான பிராணவாயு இன்மை ஏற்படும் இதனால் முதுகுவலி சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும்.
 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More