Saturday, May 28, 2011

இலங்கைக்கு எதிராக தவறான பிரசாரம்: ராஜபக்ஷே ஆவேசம்

கொழும்பு: வெளிநாட்டில் தங்கியுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள், தவறான பிரசாரம் மூலம் இலங்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என, அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட இரண்டாம் ஆண்டு விழா, கொழும்பு நகரில் நேற்று நடந்தது. இதையொட்டி நடந்த ராணுவ அணிவகுப்பை, அதிபர் ராஜபக்ஷே பார்வையிட்டார். அப்போது, அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில், மனித உரிமை மீறப்பட்டதாக கூறப்படுகிறது. நமது ராணுவத்தின் மீது படிந்துள்ள இந்த கறை போக்கப்படும். பயங்கரவாத ஒழிப்பின் மூலம் உண்மையான மனித உரிமை நிலை நாட்டப்படும். விடுதலைப் புலிகளுடனான போரின் போது ஒரு கையில் ஆயுதமும், மறு கையில் மனித உரிமை அடங்கிய பட்டியலையும் நமது ராணுவ வீரர்கள் ஏந்தியிருந்தனர். நாங்கள் ஒரு போதும் உங்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம். வெளி சக்திகள் நம்மை ஒரு போதும் அச்சுறுத்த முடியாது. நமது பிரச்னைகளை நாமே தீர்த்துக் கொள்வோம். அரசியலமைப்பு சட்டத்தில் மனித உரிமையை சேர்த்து விட்டால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு விடாது. வெளிநாட்டில் தங்கியுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தவறான பிரசாரம் மூலம் இன்னும் இலங்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More