ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'மறுமை நாளில்
விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்' என்று
கூறினார்கள். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! எவருடைய
வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக் கரத்தில் வழங்கப்படுமோ
அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' என்றல்லவா
அல்லாஹ் கூறினான்?' (திருக்குர்ஆன் 84:08) என்று கேட்டேன். அதற்கு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இது (கேள்வி கணக்கு தொடர்பானது
அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை
அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். மறுமையில்
துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை
செய்யப்படாமலிருப்பதில்லை' என்று கூறினார்கள்.புகாரி 653





0 comments:
Post a Comment