
அவரது அறிக்கை: ஏமன் நாட்டில், அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி, எதிர்க் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபருக்கு ஆதரவாக, ராணுவமும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக, பழங்குடியினரும், உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ராணுவ மருத்துவமனையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தமிழக நர்ஸ்கள், அதிகளவில் பணியாற்றுகின்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், ராணுவ முகாமையும், மருத்துவமனையையும் தாக்கி வருகின்றனர். இதனால், தமிழக நர்ஸ்கள் உணவு, உறக்கம் இன்றி, கடந்த சில நாட்களாக உயிரை கையில் பிடித்துள்ளனர். தங்கள் சிகிச்சைக்காக, இந்த நர்சுகளை, ராணுவமும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் தொடர்ந்து இருந்தால், நர்சுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையுள்ளது. இதனால், அவர்களது உறவினர்கள், கண்ணீரும், கம்பலையுமாக தமிழகத்தில் உள்ளனர். எனவே, தமிழக நர்சுகளை மீட்கவும், அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரவும் மத்திய அரசு உடனே தீவிரமாக ஈடுபடவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment