Saturday, May 28, 2011

அண்டை நாட்டால் இந்தியாவுக்கு பிரச்னை: சிதம்பரம்

புதுடில்லி: "இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடுகள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளாக இருப்பதால், இந்தியாவுக்கு பிரச்னையாக இருக்கிறது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: பிரச்னைக்குள்ளான அண்டை நாடுகளுக்கு இடையே இருக்க வேண்டிய சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பக்கத்தில், மேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடுகள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளாக உள்ளன. தற்போது, பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தானை பாதுகாப்பான இடமாக வைத்து செயல்படுகின்றன. இதன் காரணமாக, பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் பலவீனமாக உள்ளது. இந்திய மக்களின் பாதுகாப்புக்கு, அண்டை நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது மிகவும் முக்கியம்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More