skip to main |
skip to sidebar
10:10 AM
Unknown
திருவாரூர்:திருவாரூர் அருகே தனியார் பஸ் பாலத்தில் மோதி ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்த கோர விபத்தில், டிரைவர் உட்பட ஆறு பேர் இறந்தனர்; திருவாரூரில் இருந்து யோகமங்கலம் என்ற தனியார் பஸ் நேற்று மாலை, 35க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கிச் சென்றது. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள திருமலைராஜன் ஆற்றுப்பாலத்தில் சென்றபோது, திடீரென தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு ஆற்றில் தலைக்குப்புற விழுந்து உருண்டு அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பயணிகள் பஸ்சில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.இரண்டு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் பஸ்சை நிமிர்த்தி, உள்ளே இருந்த பயணிகளை மீட்டனர். பஸ் டிரைவர் கார்த்தி, உட்பட இரண்டு ஆண்கள், ஒரு பெண், 15 வயது மதிக்கத்தக்க சிறுமி, 5 வயது சிறுமி ஆகிய ஆறு பேர் தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்தில் பலியாகி கிடந்தனர்.பஸ் கண்டக்டர் ரவிச்சந்திரன் உட்பட 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment