திருபட்டினம் - தமுமுக கிளை அலுவலகம் திறப்பு விழா
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக திருபட்டினம் கிளை அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் ஹாஜா ஷேக் அலாவுதீன் தலைமையில் திருபட்டினத்தில் நடைபெற்றது. அலுவலகத்தை தமுமுக தலைவர் மௌலவி J.S.ரிபாயி ரஷாதி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர் முகமது ஆசிக், கிளை மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிரவி கிளை சார்பாக கழக பெயர் பலகை திறப்பு விழா கிளை தலைவர் முகமது யூனுஸ் தலைமையில் நிரவியில் நடைபெற்றது. இந்நிகழ்ட்சியில் அரசு உதவி காஜியார் முகமது சுல்தான், கிளை மமக செயலாளர் ஹமீது சுல்தான், கிளை பொருளாளர் முகமது ரில்வான், கிளை துணை செயலாளர்கல் புருஹானுதீன், ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெயர் பலகையை தலைவர் மௌலவி J.S.ரிபாயி ரஷாதி அவர்கள். திறந்து வைத்தார்கள். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நைனா முகமது, மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட துணை தலைவர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜா முஹமது, இக்பால், முகமது கபீர், முகமது ஹுசைன், ஜியாவுதீன், காரை நகர தலைவர் ஜகபர் சாதிக், நகர மமக செயலாளர் அப்துல்லா, நகர செயலாளர் சிக்கந்தர், ஜாஹிதீன் மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது





0 comments:
Post a Comment