
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆரம்பம், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது
காரைக்கால், ஜூலை.2/(மு.இ.) வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையார் கோவிலில், இன்று காலை புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும், திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஈசனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார், காரைக்கால் கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள பாரதியார்வீதியில் தனி கோவில் கொண்டுள்ளார். புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் காரைக்கால் அம்மையார் இல்லத்திற்கு பிச்சாண்டவர் கோலத்தில் சென்று அமுதுண்பார். அப்போது அம்மையாரின் கணவர் பரமதத்தர் தனது இல்லத்திற்கு அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அம்மையார் பிச்சாண்டவருக்கு உண்ண வைப்பார். அதனை பிச்சாண்டவர் மகிழ்வுடன் உண்டு செல்வார்.
பிறகு, இல்லத்திற்கு வரும் கணவர் பரமதத்தருக்கு அமுதுடன் மற்றொரு மாங்கனியை அம்மையார் வைப்பார். அம்மாங்கனியை உண்ட பரமதத்தர், மிகவும் ருசியாக இருப்பதாகவும், எனவே, தான் அனுப்பிய மாங்கனிகளில் மற்றொன்றையும் வைக்குமாறு கேட்க, செய்வதறியாது திகைத்த அம்மையார் சிவபெருமானை வேண்டுவார். அப்போது மற்றொரு மாங்கனி அம்மையார் கைகளில் மேலிருந்து விழும். அதை கணவர் பரமதத்தருக்கு அம்மையார் வைப்பார். அதை உண்ணும் பரமதத்தார் இது முன்னினும் அதிகமான சுவையாக உள்ளது. இது நான் கொடுத்தனுப்பிய மாங்கனி இல்லை. இது ஏது? என அம்மையாரிடம் பரமத்தர் கேட்கும்போது, அம்மையார் நடந்த உண்மைகளை உரைப்பார். இதை நம்பாத பரமத்தர், எங்கே மற்றொரு மாங்கனியை வரவழைத்து காட்டு என்பார். கணவர் முன்னால், மீண்டும் அம்மையார் சிவபெருமானை வேண்ட, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கைகளில் விழும். இதை பார்க்கும் பரமத்தர், நீ மனிதப்பிறவி அல்ல. தெய்வப்பிறவி உண்ணுடன் இனி வாழ்வது தெய்வகுற்றமாகும். என அம்மையாரை பிரிந்து சென்று மறுக்கல்யாணம் செய்துகொள்வார். காரைக்கால் அம்மையாரின் வரலாற்று நிகழ்ச்சியை மையமாக கொண்டு, காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழா காரைக்காலில் ஒரு மாதம் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு ஜூலை 1-ந் தேதி (நேற்று) மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 7.30 மணிக்கு, காரைக்கால் அம்மையார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்திற்கு வரும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-க்கள் நாஜிம், திருமுருகன், மாவட்ட கலெக்டர் அசோக்குமார், எஸ்.எஸ்.பி ஆன்டோஅல்போன்ஸ், சப்-கலெக்டர் முத்தம்மா, கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனியதிகாரி கோவி ஆசைதம்பி, வாரியத்தலைவர் கோவிந்தராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கரன், பங்குத்தந்தை அல்போன்ஸ் அடிகளார், முக்கியஸ்தர்கள் முத்துப்பிள்ளை, இஸ்மாயில், சோழசிங்கராயர், கோபால் உதயகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு 10 மணிக்கு, காரைக்கால் அம்மையாரும், பரமதத்த செட்டியாரும் முத்துச் சிவிகையில் திருவீதியுலா வரும் நிகழ்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்சியாக, நாளை அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேக தீபாரணையும், பின்பு காலை 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் காசுகடை மண்டபத்திலிருந்து இரு மாங்கனிகளை தன் இல்லத்திற்கு கொடுத்தனுப்பும் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு, வீட்டு வாசல், மாடி கூறைகளில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து சென்று அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
1 comments:
நிச்சயம் இதுப் போன்றவர்கள் இஸ்லாமியன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவதில் அர்த்தமே இல்லை ....இவர்கள் பதவிக்காக மார்க்கத்தை விற்கும் மோசமானவர்கள். எங்க தளத்திற்கும் வாங்க ....உங்க கருத்த சொல்லுங்க ......
புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
Post a Comment