சென்னை அருகே அப்பாவி முஸ்லிம் படுகொலை...............!!
தமுமுகவினர் முற்றுகையிட்டுள்ளதால் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசார்.
முற்றுகையால் ஈசிஆரில் பதற்றம்
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலை யில் உள்ள கானத்தூர் அப்துல் கலாம் 3&வது தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி கீதா. நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் கொசு வலை அடிக்க பனையூரை சேர்ந்த ஹுமாயூன் (46), சவுகத் அலி ஆகியோர் சென்றனர். வேலை முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில், வீட்டில் இருந்த கம்மலை காணவில்லை என பெருமாள்சாமியிடம் கீதா கூறியுள்ளார். இதையடுத்து ஹுமாயூனிடம் தம்பதியர் விசாரித்துள்ளனர். ‘கம்மலை நாங்கள் எடுக்கவில்லை’ என ஹுமாயூன் கூறியுள்ளார். இதுபற்றி கானத்தூர் போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது.
ஹுமாயூன், சவுகத் அலி இருவரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதும், ‘எங்களுக்கு கம்மலை பற்றி தெரியாது, நாங்கள் எடுக்கவில்லை’ என்று இருவரும் கூறியுள்ளனர். சவுகத் அலியை மட்டும் விடுவித்த போலீசார், ஹுமாயூனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு ஹுமாயூனின் மனைவி யாஸ்மினுக்கு போன் செய்த போலீசார், ‘விசாரணைக்கு வந்த உங்களது கணவர் தீக்குளித்து விட்டார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்’ என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளனர். அதை கேட்டு பதற்றம் அடைந்த யாஸ்மின், மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு சென்று விசாரித்தபோது, ஹுமாயூன் இறந்து விட்டது தெரிந்தது.
இந்த தகவல் பரவியதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும் பொதுமக்களும் இன்று காலை கானத்தூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சென்னை அருகே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளி, தீக்குளித்து இறந்த கானத்தூர் போலீஸ் ஸ்டேஷன்.
ஹுமாயூன் (உள்படம்) தீக்குளித்ததாக கூறப்படும் இடத்தில் போலீசார் பெட்ஷீட்டால் மூடி வைத்துள்ளனர்.
இந்த தகவல் பரவியதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும் பொதுமக்களும் இன்று காலை கானத்தூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
தமுமுக ஒன்றிய துணைத் தலைவர் முகமது யூசுப் கூறும்போது, “விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஹுமாயூன் எப்படி தீக்குளித்தார்? போலீஸ் ஸ்டேஷனில் மண்ணெண்ணெயும் தீப்பெட்டியும் வந்தது எப்படி? அவரது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இறந்த ஹுமாயூனின் மனைவிக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்றார்.
இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் உமாசங்கர் ஆகியோர் ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.





0 comments:
Post a Comment