Wednesday, July 11, 2012

முஸ்லிம்களுக்கு 10% உள் ஒதுக்கீடு : மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்!



முஸ்லிம்களுக்கு 10% உள் ஒதுக்கீடு : மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்!

புறக்கணிக்கப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தில் வாழும் 27% முஸ்லிம்கள், நிவாரணம் பெறும் வகையில்

வெள்ளிக்கிழமையன்று (06/07) மேற்கு வங்க சட்டசபையில், சரித்திரம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பாதிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமூகம், நிவாரணம் பெறத்துவங்கும். மாநிலத்தில் அமலில் இருந்து வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான 17% இட ஒதுக்கீட்டிலிருந்து, முஸ்லிம்களுக்கு 10% ”உள் ஒதுக்கீடு” வழங்கும் தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சியான கம்யூனிஸ்டுகளும் இதை ஆதரித்தனர். எதிர்கட்சித்தலைவர் சூரிய காந்த மிஸ்ரா இந்த தீர்மானத்தை ஆதரித்ததோடு, உயர்க்கல்வியிலும் இந்த ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும், என்றார். இதற்க்கான சாத்தியக்கூறுகள் பற்றி, முழுத்தகவல்களையும் அடுத்த சட்டமன்றக்கூட்டத்தில் தாக்கல் செய்யுமாறு, உயர்க்கல்வித்துறை அமைச்சர், பரத்திய பாசுவுக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மம்தாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், முந்தய கம்யூனிச ஆட்சியிலும், தாங்கள் பல முறை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்ததாகவும் நினைவு கூறினர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More