
கண் பாதுகாப்பு
சரியான உணவுப்பழக்கம் கண் நலத்துக்கு மிக மிக அவசியம். இது குழந்தைப் பருவத்திலிருந்தே கவனிக்க வேண்டிய குறிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வேறேதுமில்லை. மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
* ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும் மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான்.
வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.
* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.
* வைட்டமின் சி - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் அவசியம்.வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவறில் தேவையான அளவு இருக்கிறது.
6. குழந்தைகளும் கண்ணாடியும்:
உங்கள் குழந்தை கண்ணாடி அணிய வேண்டிய நிலையிலிருந்தால் அவர்கள் கண்ணாடி அணிவதை ஊக்குவியுங்கள். அய்யோ நம் குழந்தை இந்த வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டியதாகிவிட்டாதே என்று நீங்களே புலம்பாதீர்கள்.
குழதைகளுக்கும் காய்ச்சல் வரும், வயதானவர்களுக்கும் காய்ச்சல் வரும் என்பதை மறந்து விடாதீர்கள். கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனெனில் பார்வைத் திறன் மாறியிருக்கலாம். தவறான கண்ணாடியை அணிவதும் கண்களை பாதிக்கும்.
கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகள் :
அ) கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்க்காக கண்களைக் கசக்காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணீர் பெருக்கெடுத்து அவற்றை தானே வெளியேற்றிவிடும். உறுத்தல் அதிகமாக இருக்குமேயானால் சுத்தமான தண்ணீரினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம் தூசுகளை அகற்றிவிடலாம்.
ஆ) கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஆசிட் தெறித்துவிட்டால், கண்ணில் சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற்க்கும் வரை அலம்ப வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
இ) வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்பபடும்.
தானத்தில் சிறந்தது கண் தானம். கார்னியல் பார்வைக்கோளாரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் தானமாகக் கிடைத்தால் மட்டுமே செய்யக்கூடிய கார்னியா மாற்று ஆபரேஷன் மூலமே மீண்டும் பார்வை கிடைக்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்க்காக கண்கள் தானமாக தேவைப்படுகிறது.
நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மரணமடைந்துவிட்டால், மரணமடைந்தவரின் உறவினரைச் சந்தித்து, மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்குமாறு ஊக்குவித்து ஆறு மணி நேரத்துக்குள் அவர்களது கண்களை தானமாக வழங்கினால் அது ஒரு புண்ணியமான காரியமாகும்
0 comments:
Post a Comment