"நித்யானந்தா சீடரால் முதியவர் தாக்கப் பட்டாரா? வீடியோ காட்சிகளால் கிளம்புது சர்ச்சை!
ஞாயிறு, 24 ஜூன் 2012 18:19
நித்யானந்தா சீடரால் முதியவர் தாக்கப் பட்டாரா? வீடியோ காட்சிகளால் கிளம்புது சர்ச்சை!மதுரை ஆதீன மடத்தில் சாப்பிட வந்த முதியவரை பைஜாமா அணிந்த ஒருவர் கன்னத்தில் அறைந்தும், காலால் உதைத்தும் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகளால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான வீடியோ காட்சியில் ஜூன் 10ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு சாப்பிட வந்த பலர் ஆங்காங்கே அமர்ந்துள்ள நிலையில் முதியவர் ஒருவர் தட்டுடன் நின்று கொண்டு இருக்கிறார். வெள்ளை ஜிப்பா அணிந்த ஒருவர் அந்த முதியவரை கன்னத்தில் பளார் பளார் என அறைந்து விட்டு காலால் எட்டி உதைத்ததில் முதியவர் தடுமாறி கீழே விழுகிறார்.
மதுரை ஆதீன மடத்தில் முதியவர் ஒருவரை அங்குள்ள சீடர் ஒருவர் தாக்கும் இந்த வீடியோ காட்சிகளால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. வீடியோ காட்சிகள் கொடுமையாகவும் நெஞ்சை பதை பதைக்க வைப்பதாகவும் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீன மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் நிருபர்களைத் தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப் பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தாவுக்கு, சீடர் மூலம் புது தலைவலி உண்டாகியுள்ளது.





0 comments:
Post a Comment