
1. பூமியானது (அதன் அடிப்பாகததிலிருந்து) கடுமையான அசைவாக அசைக்கப்பட்டு விடும் போது_
2. இன்னும் பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது_
3. இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) "இதற்கென்ன நேர்ந்தது?" என்று கூறிவிடும் போது_
4. அந்நாளில் (பூமியானது) அது, தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்_
5. நிச்சயமாக உமதிரட்சகன் (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்கு (க்கட்டளையிட்டு) வஹீமூலம் அறிவித்ததன் காரணமாக!
6. (அவ்வாறு பூமி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்) அந்நாளில் மனிதர்கள் தங்கள் செயல்கள் அவர்களுக்கு காட்டப்படுவதற்காக பல பிரிவினர்களாகப் புறப்பட்டு வருவார்கள்.
7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் பய)னைக் கண்டு கொள்வார்.
8. இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் கேடி)னைக் கண்டு கொள்வார்.
0 comments:
Post a Comment