Monday, June 25, 2012

அல்லல் படுத்தும் ஐந்து பிரச்சினைகள் :



அல்லல் படுத்தும் ஐந்து பிரச்சினைகள் :
பெண்ணை பெற்றவர்களுக்கு இன்று மிக முக்கியமான ஐந்து பிரச்சினைகள் எழுகின்றன. ஒவ்வொரு பிரச்சினையாக அவர்களுக்கு தீர்த்து வைப்பதற்குள் விழிபிதுங்கி, நிலை குலைந்து, உளம் தளர்ந்து போகிறார்கள்.

1) பெண்ணை பெற்றபின் அவளை பக்குவமுடன் வளர்ப்பது, போதுமான அளவு அவளை படிக்க வைப்பது. 

2) பருவ வயதடைந்ததும் அவளுக்குத் தகுதியான ஒரு கணவனை தேடுவது.

3) கணவனாகத் தகுதியான ஒருவன் கிடைத்ததும் அவனுக்குத் தேவையான பொருள்களைத் திரட்டுவது.அவன் கேட்கும் தொகையை சேகரிப்பது.

4) திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டதும், ஒப்பந்தப்படி நகைகளை, சீர்வரிசைகளை தயாரிப்பது.

5) திருமணத்தின் பொழுது விருந்தினர்களை உபசரிப்பது.விருந்தினர்களின் மனம் கோனாதவாறு எல்லாச் சவுகரியங்களையும் செய்து கொடுப்பது.

இவை இத்துடன் நிற்பதில்லை, நீண்ட கதையாக வளர்ந்து முதல் பிரசவம், நாற்பதாம் நாள் தலைக்கு தண்ணிர் ஊற்றுவது போன்று தொடரும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More