வரவேற்புரையினை மல்லிகா ஃபாரூக் (தமிழ்த்துறை ஆசிரியை) அவர்கள் நிகழ்த்த, முதல் உரையினை A. மெஹ்ராஜ் ஃபாத்திமா ஆலிமா சித்தீகிய்யா - ஜூம்மா சிந்தனைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் - சென்னை அவர்கள் ''இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அவரின் உரையின் சில பகுதிகள் :
உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் மலக்குகள் வரமாட்டார்கள். மற்றும் நாய்கள் உள்ள வீட்டிலும் மலக்குகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிற வீட்டிற்கு நுழையும் போது மூன்று தடவை ஸலாம் கூறி செல்ல வேண்டும். அந்த வீட்டின் அனுமதி கிடைத்தப்பின் நாம் உள்ளே நுழையவேண்டும். மூன்நு தடவை நாம் ஸலாம் சொல்வதால் நமக்கு 30 நன்மைகள் கிடைக்கின்றன. நோன்பு காலங்களில் மட்டும் தான் நம் இஸ்லாமிய பெண்கள் குர்ஆனை ஓதிகிறார்கள். எல்லா காலங்களிலும், எல்லா நேரங்களிலும் திருக்குர்ஆனை ஓத வேண்டும் என்றார்.
இரண்டாவது பேச்சாளராக, ''குடும்ப பொருளாதார நிர்வாகத்தில் முஸ்லிம் பெண்'' என்ற தலைப்பில் டாக்டர்.பர்வீன் சுல்தானா M.A., Ph.D. அவர்கள் உரையாற்றினார்கள்.
அவரின் உரையின் சாராம்சம்:
நம்முடைய சமுதாயம் சிறுபான்மை சமுதாயமக உள்ளது. படிப்பதற்கும், மேற்கல்வி கற்பதற்கு வசதியில்லாத சமுதாயமாகவும் நாம் உள்ளோம்.
கணவனின் வருமானம் நிகற்காலம், மனைவி அதனை நல்வழியில் செலவு செய்கிறார்கள் என்பது எதிர்காலம். கணவன் சம்பாதிக்கு பணத்தினை வீணாக செலவு செய்யாமல் அதனை திறமையாக குடும்பத்திற்கு செலவு செய்யவேண்டும்.
நான் 11 ஆண்டுகாலம் சென்ஸார் போர்டில் வேலை செய்தேன். ஆகையால் தொலைக்காட்சியில் வரும் சீரியலும், திரைப்படங்களும் எவ்வளவு அசிங்கத்தினை அள்ளி தருகிறது என்பது எனக்கு தெரியும். ஆகையால் பெற்றோர்களே..விஷமத்தனமாக உள்ள தொலைக்காட்சியினையும் திரைப்படங்களை விட்டு தாங்கள் தான் உங்களின் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும்.
லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளைக்குப்பின் நிகழ்ச்சி 3 மணியளவில் மீண்டும் துவங்கியது.
A. சயீதா பானு - தலைமை ஆசிரியை B.sc,B.Ed. - இக்ரா நர்சரி பிரைமரி பள்ளி - காரைக்கால் அவர்கள் ''முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்'' என்ற தலைப்பில் உரையாற்றியானர்கள். ''மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்கொண்டு விட்டது. வளர்ச்சி என்கிற பெயரில் பல பிரச்சனைகளை நாம் உணர்கிறோம். இதனால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது.
2,3,6 வயதிலிருந்து பெண் பிள்ளைகள் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். அந்த வயதில் கேட்காததை 16 அல்லது 18 வயதில் கேட்க மாட்டார்கள். அதனால் தான் பல குடும்பங்களில் பல சிக்கல்கள் பல பிரச்சனைகள்.
இறுதியாக, டாக்டர். சுமையாக தாவூத் M.sc.,M.Phil.Ph.D - முதல்வர் - தாசிம் பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரி - கீழக்கரை அவர்கள் ''பெண் கல்வி எதற்காக?'' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த பல பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லுரிகள் மிகவும் அவசியம். தற்போது கடலோரப்பகுதிகள் மிக வேகமாக இத்தகைய பள்ளி, கல்லூரி அதிகம் வந்து விட்டது. சிறுபான்மையினர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி நிறுவனங்கள் அமைக்கபட்டு வருகின்றன. கல்வி செல்வம் அழியாக செல்வம், கேரளா மற்றும் தமிழ் நாட்டில் கல்வி விழிப்புணர்வு உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் அத்தகைய விழ்ப்புணர்வு இல்லை. சிறுபான்மை சமுதாயம் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்களை அரசாங்கம் தீட்டி வருகிறது.
பெண் கல்வி வேண்டும் .. சிந்திக்க
பெண் கல்வி வேண்டும் .. குடும்பங்களை நல்லதொரு பல்கலைக்கழகமாக மாற்ற
பெண் கல்வி வேண்டும் .. குடும்பத்தை பராமரிக்க
பெண் கல்வி வேண்டும் .. பிள்ளைகளை நல்வழிப்படுத்த..
நன்றியுரையினை, இக்லாஸ் - ரஹ்மத் பள்ளி மாணவி அவர்கள் நிகழ்த்த மாநாடு சிறப்பாக நிறைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2000 த்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





0 comments:
Post a Comment