தாய்மை அடைந்த பெண்கள் பேறுகாலத்திற்கு முந்தைய இரவுகளில் ஒரு சில முறை மட்டும் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றால் அவர்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிக வாய்ப்பிருப்பதாக நியூசிலாந்து நாட்டின் மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரசவத்துக்கு முந்தைய மாதத்தில் பகலில் உறங்குவதும், இரவில் நீண்ட நேரம் தூங்கிக் கழிப்பதும் நல்லதல்ல என்றும், தாய்மார்கள் பிரசவத்திற்கு சில தினங்களுக்கு முன்பிருந்து இடதுபுறமாக ஒருக்களித்து படுத்து உறங்குவது பிரசவத்தை சிக்கலாக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
கர்ப்பமான பெண்கள், முதுகு தரையில் படும்படி மல்லாந்து படுப்பது அல்லது வலதுபுறம் ஒருக்களித்து படுத்திருந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.
கர்ப்பிணிகள் கடை பிடித்துவரும் ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களால் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படாமல் போகிறது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

Posted in: Knowledge





0 comments:
Post a Comment