14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் செப்.15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய கோரி மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தொடர் பிரச்சார முன்னேடுப்புகளை தொடங்கி உள்ளது நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதன் தொடக்கமாக மார்ச் 30 அன்று திருப்பூரில் தொடக்கப்பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது எமக்கு நம்பிக்கையின் சிறு கீற்று துளிர்விட தொடங்கி உள்ளது. அன்பான நன்பர்களே...! அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்கான எமது அடுத்த களம் நோக்கி ஓடி கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு சமுதயத்தின் அவலக்குரல் உங்கள் காதுகளுக்கு கேட்கிறதா? ஒரு நிகழ்விற்கு உங்கள் ஒத்துழைப்பு போதுமானதா?
நீங்கள் ஓய்ந்து விட்டீர்களா?
ஒவ்வொரு நாளும் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்கான உங்கள் குரல் ஒலிக்கட்டுமே!
அது அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்துமே!
உங்கள் நன்பர்கள்,உறவுகள்,அரசு அதிகாரிகள் என அனைத்து தரப்பினர்களிடமும் முன்னேடுத்து செல்லுங்கள் என அன்போடு வேண்டுகிறோம்.
உங்கள் ஆதரவு இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளின் விடுதலை வரை தொடரட்டும்.
இவன். ஒருங்கினைப்பாளர். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம். தமிழ்நாடு





0 comments:
Post a Comment