|
|||||||||
|
முதியோர், மாற்றுத் திறனாளிகள்
பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க சிறப்பு வசதி
முதியோர், மாற்றுத் திறனாளிகள், முன் அனுமதி பெறாமல், நேரடியாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வசதி
செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்ப முறையில், விண்ணப்பங்கள் சரி பார்த்தலுக்கு, "ஆன்-லைனில்' தனியாக முன் அனுமதி பெற
வேண்டும். தற்போது,
முதியோர் மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 60 மற்றும் அதற்கு
மேற்பட்ட வயதினர்,
மாற்றுத் திறனாளிகள்
இனி,
"ஆன்-லைனில்'
பாஸ்போர்ட்டிற்கு
விண்ணப்பித்ததற்கான,
விண்ணப்ப எண்ணின் பிரதி
(Print
out), உரிய சான்றிதழ்களுடன், பாஸ்போட்டிற்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள, பாஸ்போர்ட் உதவி
மையத்தில் மட்டும்,
வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, இவ்வசதியைப் பெறலாம்.
அரசு ஊழியர்கள்,
அவர்களது கணவன் அல்லது
மனைவி,
மூன்று வயதிற்குட்ட
குழந்தைகள் ஆகியோர்,
பாஸ்போர்ட்டிற்கு நேரடியாக
விண்ணப்பிக்கும் வசதி,
தாம்பரம், பாஸ்போர்ட் உதவி
மையத்தில் சமீபத்தில் செய்யப்பட்டது. பத்திரிகை தகவல் அலுவலக செய்திக்குறிப்பில்
இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தால் ஆயுள்
நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி
தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாகக் கூறி ஏமாற்றி மோசடி. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த
வல்லம்படுகை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் லதா. நேற்று காலை, இவரது வீட்டிற்கு வந்த வெளி
மாநிலத்தைச் சேர்ந்த இருவர், தங்க நகைக்கு பிரஷ் மூலம் பாலீஷ் போட்டுத் தருவதாகக்
கூறினர்.
அதனை நம்பிய லதா, தனது ஒன்றரை சவரன் செயினை
கொடுத்தார். உடன்,
அவர்கள் இருவரும், ஒரு பாத்திரத்தில் தண்ணீர்
எடுத்து கெமிக்கலை கலந்து, செயினை அதில் போட்டு நெருப்பில் சூடுபடுத்தினர். இதனால்
சந்தேகமடைந்த லதா,
நெருப்பில் ஏன் நகையை
கொதிக்க வைக்கிறீர்கள் எனக் கேட்டு, கூச்சல் போட்டு, அருகில் இருந்தவர்களை அழைத்தார்.
இருவரும் தப்பியோடியபோது, ஒருவர் மட்டும் சிக்கினார்.
அவருக்கு,
பொதுமக்கள் "தர்ம
அடி' கொடுத்து, கட்டி வைத்தனர். பின், அந்தச் செயினை அருகில்
இருந்த கடையில் எடை பார்த்தபோது, 4 கிராம் குறைந்திருந்தது. கெமிக்கல் மூலம், செயினில் உள்ள தங்கத்தை
கரைத்து எடுக்கும் நூதன மோசடியில், இருவரும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
புதிய பேஸ்புக்
வைரஸ்
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ்
நிறுவனம் ஒன்று,
புதிய வகை வைரஸ் ஒன்று
பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக்
தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை
இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ்
அல்ல. இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய பைல் ஒன்று உள்ளது. இதில் கிளிக்
செய்தவுடன் ZeuS
crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது. தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure:
Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ்
பைலாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும்.
0 comments:
Post a Comment