CDAC-ல் ஆசிரியர் பணி
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்Centre for Development of Advanced Computing (CDAC)என்ற பயிற்சி நிலையத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை: School Of Management
பணியின் பெயர்: management Faculty (MF)
காலியிடம்: 1
கல்வித்தகுதி: CS/IT/EC/EE பிரிவில் முதல் வகுப்பில் பி.இ,/பி.டெக் முடித்தபின் மார்க்கெட்டிங் பிரிவில் முதல் வகுப்பில் MBA முழுநேர முடித்திருக்க வேண்டும்.
2. துறை: School of Electronics of IT/Finishing School
பணியின் பெயர்: Engineering Faculty(EF)
காலியிடங்கள்: 4
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: CS/IT/EC/EE/ VLSI/ Embedded System பிரிவில் ME/M.Tech முடித்திருக்க வேண்டும். அத்துடன் ஒரு வருட கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இரண்டு பணிகளும் மாதம் ரூ.30,000
விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டபின் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். வகுப்பறையில் பாடம் நத்தும் திறன் சோதிக்கப்பட்டபின் தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் இரண்டு பணிகளுக்கும் தனித்தனியாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை www.cdacnodia.in/ career.asp. என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை hr-noida@cdac.in என் ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.11.2011-க்குள் அனுப்ப வேண்டும்.
நுண்ணுயிரி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி பணி
சண்டிகாரிலுள்ள மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் Microbial Technology ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பணியின் பெயர்: Prinicipal Scientist
காலியிடங்கள்: 4
கல்வித்தகுதி: ஆர்கானிக், பயோ ஆர்கானிக் கெமிஸ்ட்ரி அல்லது ஏதாவதொரு உயிர் அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியாளராக 3 முதல் 6 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.37,400 - 67,000.
2.பணியின் பெயர்: Senior Scientist
காலியிடங்கள்: 5
கல்வித்தகுதி: Protein Science &Engineering/ Infectious Diseases/ Bio-Informatics/ Molecular Modelling/Molecular Biology & Gentics/Microbial Taxonomy/Cell Bilogy போன்ற ஏதாவதொரு அறிவியல் துறையில் முனைவர் பட்டத்துடன் இரண்டு வருட ஆராய்ச்சி பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ15,600 - 39,100
வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3.பணியின் பெயர்: Scientist (Instrumentation)
காலியிடங்கள்: 2(ஒபிசி)
கல்வித்தகுதி: Electronics/ Electronics&communication Instrumentation Sciencesபாடத்தில்ME/M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Scientist (Veterinarian)
காலியிடம்: 1 (ஒபிசி)
சம்பளம்: ரூ.15,600 - 39,000
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் உச்ச வயது வரம்பானது 20.12.2011 தேதிப்படி நிர்ணயிக்கப்படும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி,எஸ்டி, ஒபிசி,பிஎச் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின்போது அறிவியல் ஆராய்ச்சியில் விண்ணப்பதாரரின் சாதனைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை ''Director, IMT, Chandigarh'' என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி,பிஎச் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.imtech.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பின்னர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள -ஐ பூர்த்தி செய்து ao@imtech.res.inஎன்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும்.
அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Administrative Officer,
Institute of Microbial Technology,
Sector 39-A,
Chandigarth - 160036.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2011





0 comments:
Post a Comment