Sunday, November 13, 2011

சிம்புவுக்கு பிரியாணி விருந்து கொடுத்த தரணி!

Director Dharani gives party to simbuஒஸ்தி படத்தில் நடிப்பதற்காக 2 மாதங்கள் பிரியாணி சாப்பிடாமல் இருந்து வந்த சிம்புக்கு, சூட்டிங் முடிந்ததும் பிரியாணி விருந்து படைத்து அசத்தியிருக்கிறார் டைரக்டர் தரணி.  சிலம்பரசன் - ரிச்சா நடிக்கும் `ஒஸ்தி படத்தை டைரக்டர் தரணி இயக்கி உள்ளார். இந்தியில் சக்கை போடு போட்ட `தபாங் படத்தின் ரீமேக் கதைதான் இந்த படம். சிலம்பரசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில், சிக்ஸ் பேக் உடற்கட்டில் நடிக்க வேண்டி இருந்ததால் சிலம்பரசன் உணவு கட்டுப்பாட்டுடன் கடுமையாக உடற்பயிற்சி செய்தார். சிலம்பரசனுக்கு பிரியாணி என்றால் அலாதி பிரியம். ஆனால் சிக்ஸ்பேக் உடற்பயிற்சியின் போது பிரியாணிக்கு தடை என்பதால் கடந்த 2 மாதமாக சிலம்பரசன் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு `ஒஸ்தி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் டைரக்டர் தரணி சிலம்பரசனுக்காக பிரத்யேகமாக பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் பல்வேறு வகையான பிரியாணி இடம் பெற்றிருந்தது. நடிகர் சிம்பு பிரியாணியை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தார்.

ஒஸ்தி படம் குறித்து சிலம்பரசன் அளித்துள்ள பேட்டியில், `இந்த படம் எனது கேரியரில் சிறந்த படமாக இருக்கும். படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்காக கடுமையாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த பிரியாணியை இரண்டு மாதமாக சாப்பிடவில்லை. கடைசி நாள் சூட்டிங் முடிந்ததும் டைரக்டர் தரணி சார் எனக்காக பிரியாணி திருவிழாவுக்கே ஏற்பாடு செய்திருந்தார். எனது உடற்கட்டை பார்த்து மொத்த படக்குழுவினரும் பாராட்டினார்கள். இது சந்தோஷமாக இருந்தது, என்று கூறியுள்ளார்.
 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More