Thursday, November 17, 2011

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?


நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?
 
அன்பார்ந்த சகோதரசகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதாஉங்கள்அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒருகணம் யோசித்துப்பாருங்கள்.
இந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களாஎன்னைப் பார்த்துஇக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலாஎன்று பதில் வரும் உடனே என் இஷ்டம்எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்துஇடத்தை காலி செய்துவிடுவார்கள்.
சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்
தாய்
ஏன்டாமகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டிதாலாட்டிசீராட்டி வளர்த்தேனேதனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டாதாய்ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்சொல்லடா என் மகனே?
மகன்
சரி விடும்மாஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனாஇதைப் போய் பெரிசு பண்ணிபேசுறியே உனக்கு அறிவு இருக்காஎனக்கு பிசினஸ்- ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியலஅதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியலஇப்ப என்னாங்கறாஉன்னை பார்க்காததுஒரு குத்தமாஅப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியாஎன்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்அந்தஇடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!
உங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
தந்தை
ஏன்டாமகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்குசின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன்! 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன்! 25 வயசுலஉனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனானஎனக்கு கொடுப்பதில்லையேதந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்சொல்லடாஎன் மகனேஇந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன்ஏன்னிடம் மருந்துவாங்ககாசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா?
மகன்
என்னப்பாஉனக்கு அறிவு இருக்காசின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்பசொல்லிக் காட்டுறியேநீ எல்லாம் ஒரு அப்பனாஇது உனக்கு நல்லா இருக்காவயசாகி போனதால புத்திகெட்டுப்போச்சாஇப்ப என்ன உனக்கு காசுதான வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீபன்னு சாப்பிடுஇதுக்கப்பறம் காசு கீசுன்னு எங்கிட்ட வந்துடாதமருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொருமகனிடம் போய் கேள்என்ன தொல்லை பண்ணாத!
உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள்நீங்களோ அவரைசமாளித்துவிட்டீர்கள்அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!
உங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
மனைவி
என்னங்கநமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டதுஅழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும்,கை நிறைய வருமானம் அபரிமிதமாக இருக்குஇத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம்நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான்உங்களுக்கு எதில் குறை வைத்தேன்சொல்லுங்கள்ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்கநானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்?
கணவன்
என்ன ரொம்பத்தான் ஓவரா பேசுரேபொம்பளைன்னு பார்க்கறேன் இல்லன்னா நடக்கறதே வேறகணவன்என்கிற மரியாதை போயிடுச்சாஇந்த பேச்சே போதுமே உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப!
எனக்கு வயசு இருக்குவருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய தெம்புஇருக்கு உனக்கு விருப்ப மிருந்தா............ ......... ......... ......... ...????(சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டேஇருக்கும்)
உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்!! அந்தஇடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!
"மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்றுவைத்துக்கொள்வோம்!"
அல்லாஹ்
ஆதமின் சந்ததியைச் சேர்ந்தவனேஎன் அடிமையேநான் உனக்கு
· நல்ல பெற்றோரை கொடுத்தேன்!
· நல்ல மனைவி மக்களை கொடுத்தேன்!
· அறிவுத் திறமையும் செல்வத்தையும் கொடுத்தேன்!
· சொத்துக்கள்சுகங்களை கொடுத்தேன்!
· கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்!
· உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்!
· நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும்அணுப்பினேன்
முஸ்லிமாக வாழந்து, 5 வேளை தொழுகைகளை பேணிஜகாத் கொடுத்துஹஜ் செய்து உலகில் வாழந்துவந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்?
படைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?
நீங்கள்
?
அன்புச் சகோதரசகோதரிகளே வாழந்து விட்டால் போதுமாநாலு காசு சம்பாதித்தால் போதுமாசொத்துசுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா?
இந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம்அதேநேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை தங்குமிடமாக எண்ணிநிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவையாசகோதர சகோதரிகளே
நம்முடைய அராஜக குணத்தால்
· பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,
· வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்
· கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்
· ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்
மேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள்அல்லாஹ்விடம் வெற்றி கொள்ள முடியுமா?
வாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டியவிதத்தில் இருந்தால் நமக்கு இலாபமாநட்டமா?
இதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்!
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்இது அல்லாத(பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோஅவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன்4:116)'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்''
(திருக்குர்ஆன், 5:72)
நபிமொழி
இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்'
இறைவனுக்கு இணை கற்பிப்பதும்மனிதனைக் கொலை செய்வதும்தாய் தந்தையரைப்புண்படுத்துவதும், 'பொய் கூறுவதும்அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களாகும்இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலிஅவர்களின் மற்றோர் அறிவிப்பில்'பெரும் பாவங்கள்என்று வந்துள்ளது.
(புகாரி 6871)
இறைத்தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையானகோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா)புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக்கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றிஅவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்என இப்னு அப்பாஸ்(ரலிஅறிவித்தார். (புகாரி 6882)

அன்புச் சகோதர சகோதரிகளே!
மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை!
 
இணைவைப்பதை அல்லாஹ் மன்னிப்பதில்லை!
சிந்திப்பீர்செயல்படுவீர்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

குறிப்பு
இந்த கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம்உள்ளத்தால்ஒவ்வொருவரும் இந்த நிகழ்வுகளை உணர வேண்டும் என்பதற்காகவே நீங்கள் என்ற வார்த்தையைபயன்படுத்தியுள்ளேன். (தவறாக தென்பட்டால் மன்னிக்கவும்)

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More