மதுரை: ""தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும், போராட்டம் நடத்தப்படும்,'' என மதுரையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வடமாவட்டங்களை விட, தென்மாவட்டங்களை சேர்ந்த கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். மதுரையில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 926 கோடி ரூபாயில் 30 சதவீதம் மாநகராட்சியும் பங்களிப்பை செலுத்த வேண்டும். மாநகராட்சியில் பணம் இல்லாதால் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. மாநகராட்சி செலுத்த வேண்டிய 350 கோடி ரூபாயை அரசு வழங்க வேண்டும். ரயில்வே கட்டணத்தை உயர்த்த கூடாது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கேரளா புதிய அணை கட்ட தயாராகி வருகிறது.
மண்டல் கமிஷன் பரிந்துரை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27 சதவீதத்தில் 5.5 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க பார்லியில் தனி நிலைக்குழு அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். தேர்தலுக்கு பின் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும். மாநிலத்தில் இலவச வேட்டி சேலை 3.5 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கைத்தறி, விசைத்தறிகளில் இருந்து 5 சதவீதம் மட்டுமே வாங்கப்பட்டு, மீதம் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரும் திட்டத்தை கைவிடவேண்டும், என்றார்.





0 comments:
Post a Comment