Saturday, September 10, 2011

டில்லி குண்டு வெடிப்புக்கு ஜ.இ.ஹி தமிழக தலைவர் கண்டனம்



 
ஜனாப் ஷப்பீர் அஹமத்

     07.09.2011 அன்று டில்லி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில் இத்தகைய செயல்பாடு மிகுந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.  பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்கு அமைதி நிலவ வேண்டியும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.  இவற்றிற்கு காரணமானவர்களை அரசு உடனே கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற வழக்குகளை காலம் கடத்தாமல் உடனடியாக முடிக்கும் வகையில் காவல் துறைக்கு உத்தரவு பிரப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சை மற்றும் நிவாரணத்தில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்.  மற்ற மற்ற விஷயங்களில் பாராளுமன்றத்தின் நேரத்தை விரயம் செய்யாமல் இது போன்று பொது மக்களின் பாதுகாப்புக்கு அரசு தீவிர கவனம் செலுத்த விவாதிக்க வேண்டும்.    இனி இத்தகைய சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு பாதுகாப்பு நடவெடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று தனது கண்டன உரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More