![]() |
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம் & தனி அமைச்சகம் அமைக்கவும் தமிழக அரசுக்கு குவைத்-தமுமுக,வேண்டுகோள்!
உள்நாட்டில் அதிகாரத்தின் வாசனையை நுகர முடியாதவர்களாகவும், வேலைவாய்ப்புகள் கிடைக்கா தவர்களாகவும், வெளிநாடுகளுக்குத் சென்ற தமிழகர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. ஈன்ற பெற்றோரையும், கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும், உற்றாரையும் சுற்றாரையும் பிரிந்து தன்னந்தனியே வளைகுடா மண்ணில் தினக் கூலிகளாய் வியர்வை சிந்தும் தமிழகளின் துயரம் வார்த்தைகளில் அடங்காதது. போலி விசாவில் சென்று சிக்கிக் கொள்வது, தவறான ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கட்டி ஏமாறுவது, டிரைவர் வேலைக்குச் சென்று வீட்டு வேலைகள் செய்வது, ஸ்டோர் கீப்பர் எனச் சென்று ஒட்டகம் மேய்ப்பது, முறையான உணவும் தங்குமிடமும், உரிய சம்பளமும் கிடைக்காமல் திண்டாடுவது, பணியிடங்களில் ஏற்படும் பிரச்னைகளால் விரட்டியடிக்கப் பட்டாலோ; முதலாளிகளால் தாக்கப்பட்டாலோ; நோய்வாய்ப்பட்டாலோ; மரணமடைந்தாலோ இந்திய தூதரகத்தின் வழிகாட்டுதலோ உதவியோ இல்லாமல் தவிப்பது என வெளிநாடு வாழ் தமிழர்களின் அவலம்.நீண்டு செல்கிறது. |
இத்தகைய அவலங்களைத் துடைக்கவும், அந்தத் துயரங்களுக்கு விடை கொடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைக் குரல்கள் எழுந்ததையடுத்து கடந்த அரசு 'வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்' என அறிவிப்பு செய்தது. எனினும் நலவாரியத்தை விட வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. ,மக்களுக்காக பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வந்து சாதனை செய்யும் அதிமுக அரசு இந்த விசயத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக [அதிமுக] அரசும் நடவடிக்கை எடுத்து ஒட்டுமொத்த வெளிநாடு வாழ் தமிழக மக்களின் மனதை மனம் குளிரும் படி செய்ய வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழக மக்களின்சார்பாக அன்புடன் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த மகத்தான பணியில் செயல்படும் உங்களுக்கு இறைவன் நிறைவான கூலியை வழங்குவானாக என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்... |






0 comments:
Post a Comment