இஸ்லாத்தின் மூல வேத நூலான புனித மிகு அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டது. ஒன்றே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்குகின்றது. கல்வியை அரசியலை ஆய்வியலை வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான அல்குர்ஆன் வசனங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக அல்குர்ஆனின் 39:09, 17:85 27:52, 29:43, 35:28, 20:114ம் இலக்க வசனங்கள் அல்குர்ஆன் கல்விக்கு அறிவியலுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அவ்வாறே எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
o "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
o " ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
Posted in: இஸ்லாமிய அறிவுரைகள்,திருக்குர்ஆன் விளக்கவுரை





0 comments:
Post a Comment