அஸ்வத் கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்' என ஆயிஷா(ரலி) கூறினார். Volume :1 Book :10
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது. Volume :1 Book :8
அனஸ்(ரலி) அறிவித்தார்.
பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். மதீனாவில் வீடுகளைக் காலி செய்வதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். 'நீங்கள் அதிகமாகக் காலடிகள் எடுத்து வைத்து(த் தொழ வருவதன் மூலம்) நன்மையைப் பெற வேண்டாமா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: Volume :1 Book :10
பராஉ(ரலி) அறிவித்தார்.
அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது 'உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!" (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது. Volume :2 Book :26





0 comments:
Post a Comment